இருக்கும் மோதே கவின் மயக்க மருந்துடைய கர்சீப்பை வேதின் மூக்கில் வைத்தான் என்ன விடு டா விடுங்க டா என கத்தி கொண்டே மயக்க மடைந்தான் வேத். க்லோரோ பார்ம் கொடுதாச்சு இன்னும் கொஞ்ச நேரத்துக்கு அசைய மாட்டான் வேத் இனி நம்ம வேலையா ஸ்டார்ட் பண்லாம் மன்வீர் என கூறினான் கவின்.
என்னய்யா இந்த பொன்னபலம் ரொம்ப துடுக்கா பேசுறான் சொல்லிவை அப்பறம் அடுத்த எலெக்ஷனல சீட்ட பிடுங்கி ஒன்னுமிலாமா ஒக்கார வெச்சிருவேன் என தங்கவேலு சக கட்சியாளரை திட்டி கொண்டிருக்க கையில் போனை வைத்து கொண்டு முருகேசன் ஓடி வந்தான் ஐயா தம்பி கிட்ட இருந்து காலு மேல காலுயா ரொம்ப நேரமா அடிக்குராறு இந்தாங்கயா என அவன் போனை கொடுக்க ஏன்டா இத முதல்லயே கொடுத்துற்கலாம்ல என்ன அவசரமோ தம்பிக்கு என போனை பிடுங்கி பேச ஆரம்பித்தான் வேலு சொல்லுப்பா தம்பி என்னாச்சு … அப்பா அப்பா என்ன யாரோ கடத்தி வெச்சிரகாங்கப்பா நான் எங்க இருக்கேன்னு தெரியல எனக்கு ரொம்ப பயமா இருக்குப்பா என்ன வந்து காப்பாத்துங்கப்பா என பதறிய வேதின் குரலை கேட்டு நடு நடுங்கி போனான் வேலு தம்பி தம்பி என்னாச்சுப்பா… என்னப்பா சொல்ற யாருப்பா உன் மேல கை வெச்சது பதட்ட படாமா சொல்லுப்பா என சேரில் அமர்ந்து கொண்டிருந்த வேலு விறு விடு வென எழுந்து வெளியே ஓடினான்.
ஹலோ ஹலோ தம்பி என வேலு கதற ஹலோ மிஸ்டர் தங்க வேலு நாங்க சொல்றத மரியாதையா கேளு உன் பையன் இப்ப எங்க கிட்ட தான் இருக்கான் நாங்க சொல்றத கேட்டின உன் பையன் உனக்கு அப்படியே கிடைப்பான் தேவையில்லாம நீ பாட்டுக்கு உன்னோட அமைச்சர் செல்வாக்க யூஸ் பண்ணி கால டிரேஸ் பண்ணி எங்க இடத்த கண்டு பிடிக்குறது போலீஸ் சிபிஐன்னு யாரையாவுது யூஸ் பண்ணி உன் பையன காப்பாத்த பிளான் போடுறது இத மாரி எதாவுது பண்ண அவ்வளவு தான் உன் பையன் வேத் காலி…. என அந்த மிரட்டல் குரலை கேட்டவுடன் டேய் என் பையன ஒன்னும் பண்ணிடாதிங்க டா நீங்க என்ன சொன்னாலும் கேக்குறேன் எவ்வளவு வேணுனாலும் தரேன் ஆனா என் வேதுக்கு ஒரு சின்ன கீறல் கூட வில கூடாது என வேலு பதற கண்டிப்பாக வேதுக்கு எதும் ஆகாது நாங்க சொல்ற மாறி கேளு இன்னிக்கு ஈவினிங் 6 மணிக்கு 30 கோடி ரூபாய் பணத்த எடுத்துக்குட்டு ஹார்பர்க்கு பக்கத்துல இருக்க பார்க்ல யாருக்கும் தெரியமா தனியா வந்து வெய்ட் பண்ணு அதுக்கப்பறம் நாங்களே கால் பண்றோம் இதுல எதாவுது சொதப்புன அதுக்கான விளைவுகள நீதான் சந்திப்ப என மிரட்டலை விட்டு காலை கட் செய்தவுடன் இதை அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த வேலுவின் முகம் குபு குபு வென வேர்த்து கொட்டியது.