இருவரும் அதில் ஏறிக் கொண்டதும் படகு புறப்பட்டது.
தண்ணீரில் செல்லும் படகில் இப்படி ஒரு அழகான வீடு போல் அமைக்கப்பட்டிருந்ததை நித்யா வியப்போடு பார்த்தாள். சுற்றி வேடிக்கை பார்ப்பதற்காக அமைக்கப்பட்ட இடத்தில் நின்று, தண்ணீரை சுற்றி பச்சை பசேலென்று இருந்த இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தாள். இந்த படகு பயணம் முழுதும் அப்படியே வேடிக்கை பார்த்தப்படி நின்றிருப்பதே ஒரு சுகம் போல் அவளுக்கு தோன்ற,
அவர்கள் வந்தது தேனிலவுக்காக அல்லவா, அதனால் அவளை பின்னாலிருந்து வந்து அணைத்த கார்த்திக்,
"நித்தி.. இன்னைக்கு முழுசும் இல்லாம, நைட்டும் நாம இந்த படகுல தான் இருக்கப் போறோம்.. ஃப்ளைட்ல இருந்து அப்படியே வந்துட்டோம்.. வா சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் வந்து பார்க்கலாம்.." என்று அவளை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்றான்.
அவர்களுக்கு காலை உணவாக கேரளா வகை உணவுகள் கொடுக்கப்பட இருவரும் ரசித்து உண்டார்கள். சாப்பிட்டு முடித்ததும் சிறு குழந்தை போல் மீண்டும் அவள் வெளியே சென்று வேடிக்கைப் பார்க்க ஆவல் கொள்ள, அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டவனின் கைகளும் உதடும் அவள் மேனியில் ஊர்வலம் வர,
"மாமா என்ன செய்றீங்க? அதுவும் இங்க வச்சு.." என்று அவள் சிணுங்கினாள்.
"ஹே நாம வந்துருப்பது ஹனிமூனுக்கு பொண்டாட்டி.. அப்புறம் இங்க இப்படி நடந்துக்காம வேற எங்க நடந்துக்குவாங்களாம்.."
"அய்யோ இங்க ஆளுங்கல்லாம் இருக்காங்க.. நாம இப்படி ரூம்ல இருக்கறதுக்கு தப்பா நினைச்சாங்கன்னா.."
"அதெல்லாம் அவங்க தப்பா நினைக்க மாட்டாங்க.. போட் ஓட்றதும், நாம தேவைன்னு கூப்பிட்டா வருவதும் தான் அவங்க வேலையே, நம்மளை தேவையில்லாம டிஸ்டர்ப் செய்ய மாட்டாங்க.. நமக்கு ப்ரைவசி வேணும்னு தான் இந்த ஹவுஸ் போட் புக் செஞ்சுருக்கேன்.. இதுக்கு தேவையான பணம் கட்டியிருக்கோம்.. அதனால நாம எதுக்கும் பயப்பட தேவையில்லை.." என்றவன், அதற்கு மேல் அவளை பேசவிடவில்லை.
ஒருபுறம் கணவனின் கையணைப்பில் இருப்பது சுகமாக இருந்தாலும், இப்படி படகு வீட்டில் வந்து இயற்கையை ரசிக்காமல் இருப்பதும் அவளுக்கு மனதில் சிறிதளவு சுணக்கத்தை ஏற்படுத்தியது.
மதியம் குளித்துவிட்டு இருவரும் வந்ததும் அவர்களுக்கு மீனுடன் சேர்ந்த மதிய உணவு
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.