(Reading time: 9 - 18 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

“எனக்குதான் தம்பி…. நான்தானே முதல் பார்வையிலேயே ஏமாளி மாதிரி தெரிவேன். எப்படியாச்சும் அதிதிகூட என்னை சேர்த்து வைக்கும் ப்ளான்தான் இது. ஆனால் வழக்கமாக இப்படி செய்ய மாட்டார்கள். இவர் ஏன் இப்படி ஸ்பெஷலா கவனிக்கிறார்னு தெரியலை”

“எனக்கும் அதுதான் குழப்பம் பாஸ்”

அவர்களுடைய குழப்பத்திற்கான பதில் அன்று மாலையே அதிரதனுக்கு கிடைத்தது. அவனுடைய கார் ப்ரேக் டவுன் ஆகி விட்டதால் காரை அப்படியே விட்டுவிட்டு வீடு  நோக்கி நடக்க ஆரம்பித்தான். இடையில் ஒரு பூங்கா வரும் அதை கடந்து விட்டால்   நடந்தே வீட்டிற்கு சென்று விடலாம்.

அவன் அந்த பூங்காவை கடக்கும்போது தொலைவில் அவரை பார்த்தான். குடும்ப நல நீதிமன்ற கவுன்சிலர்…! அவர் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறார்?

மரத்தின் மறைவில் நின்றிருந்தவரை உன்னித்து நோக்கினான். அது அவனுடைய அப்பா….! கடவுளே… இவர் அவருடன் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்?

அவர்களின் உரையாடலை கவனிக்க வேண்டிய அவசியமே இல்லை. அவனால் யூகிக்க முடிந்தது. அவனுடைய விவாகரத்து வழக்கு இழுபறியாக இருப்பதற்கு அப்பாதான் காரணமா?

அவனுக்கு கோபம் வந்தது. விரைவாக அந்த இடத்தை விட்டு அகன்றான். வீட்டிற்கு வந்தும் யாரிடமும் பேசவில்லை… பேசவும் பிடிக்கவில்லை! அவனுடைய அறைக்குள் சென்று தாளிட்டு கொண்டான்.

குளித்து முடித்து உடை மாற்றி படுக்கையில் படுத்து கண்ணை மூடினான். ஏன் அவனுக்கு மட்டும் இப்படி நடக்கிறது?

அவனை பிடிக்கவில்லை என்று சொல்லும் புது மனைவி…. அவளுடன் அவனை வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழ வைக்க முயற்சிக்கும் குடும்பம்… அதிலும் இந்த டாட்… வெரி பேட்…!

அவன் அப்படி என்ன தவறு செய்து விட்டான்?. கல்யாணம் செய்துக்க  ஒப்புக் கொண்டது குத்தமாய்யா?

மொத்த குடும்பமும் அவனுக்கு எதிரியாகி விட்டதே… ம்ஹும்… கல்யாணத்தினால் அவர்கள் எதிரியாகவில்லை விவாகரத்து முடிவினால்தான் எதிரியாகி விட்டார்கள். அந்த கவுன்சிலரை கைக்குள் போட்டுக் கொண்டு அவனுடைய பிரியமான அப்பா அவனை வழிக்கு கொண்டு வர பார்க்கிறார். வொய்… மை லார்ட்?

அன்றைக்கு  கோர்ட்டில் நடந்தவற்றை மீண்டும் நினைவு கூர்ந்தான். அவன் பேசியது… அதிதி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.