(Reading time: 15 - 29 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

தொடர்கதை - காணாய் கண்ணே - 44 - தேவி

கிருத்திகாவின் தலையில் அடிபட்டு மயங்கி இருந்தாலும் , உள்ளுணர்வு விழிப்போடு இருந்ததால் சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து விட்டாள். ஆனால் எங்கே இருக்கிறோம் என்றுப் புரியவில்லை. கண்கள் கட்டப் பட்டு இருந்த நிலையில் ஒரு இடத்தில் இருந்தவளுக்கு முழு விழிப்பும் வரவும், கண் கட்டு மட்டுமே அவிழ்க்கப் பட்டு விட்டது. கை கால்கள் இறுக்கிக் கட்டப் பட்டு இருந்தன.

சற்று கண்ணைக் மூடி மூடித்  திறந்துப் பார்க்க , எதிரில் செல்வத்தைக் கண்டாள். செல்வத்தை யார் என்று தெரியாதவள் போல் பார்த்தாள். பின் உலக ஆஸ்தான வசனமான,

“நான் எங்கே இருக்கேன்?” என்றுக் கேட்டாள்.

“இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்கிறாய்” என்றவன் “என்னை யாரென்றுத் தெரிகிறதா?” என்றக் கேட்டான்.

சற்று நேரம் யோசிப்பவள் போல் நடித்தாள் கிருத்திகா. அதற்குள்ளாக பொறுமை இழந்த செல்வம்

“என்ன மறந்து போச்சா? ஊர்லே உள்ள எல்லாரையும் அடிச்சு விரட்டி விட்டுகிட்டா எங்கிருந்து நியாபகம் வரும்?”

“ஒஹ். அந்த பஸ்லே அடிவாங்கினவன் தானே நீ?”

“ஹ. ஹ. அதே செல்வம் தான். சும்மா லேசா உரசுனதுக்கே அந்த அடி அடிச்சியே. இன்னிக்கு என்ன பண்ணப் போறேன்னுப் பார்க்கறேன்?”

“ஹ. என் மேலே கைய வச்சதுக்கே உன்னை ஜெயிலில் அடைத்தவள் நான். வேறு ஏதாவது செய்தால் உன்னை உயிரோடு விட்டு வைப்பேனா என்று யோசிக்க மாட்டாயா?

கட கடவென கட்டிடம் அதிரச் சிரித்தவன்,

“என்னை உன்னால் எதுவும் செய்ய முடியாது பெண்ணே. “ என்றான்.

“என்னை என்ன பயந்த பெண் என்று எண்ணினாயா? நான் வெளியே சென்றப் பின் உன்னை மீண்டும் சட்டத்தின் முன் நிறுத்துவேன். தண்டனை வாங்கிக் கொடுப்பேன்”

“என்னவென்று?”

“என்னைக் கடத்தியக் குற்றத்திற்காக?”

“உன்னை நாந்தான் கடத்தினேன் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. உன்னைக் கடத்திக் கொண்டு வந்த என் பிரெண்ட்ஸ் மூவரும் இந்நேரம் டெல்லி ஏர்போர்டில் இருப்பார்கள். அவர்கள் வெளிநாட்டிற்குச் சென்று விடுவார்கள். நான் ரெகார்ட்ஸ் படித் தற்போது ஜெய்பூர் வில்லாவில் தங்கி இருக்கிறேன். “

“எப்பேர்பட்ட அறிவாளியும் ஏதாவது தடயம் விடுவான். அப்படி ஒரு தடயத்தைத் தேடி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.