(Reading time: 15 - 29 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

உன்னைச் சிறையில் அடைப்பேன்”

“இனி நீ வெளியுலகம் சென்று தடயத்தைத் தேடும் அளவு விட்டு வைப்பேன் என்று நினைத்தாயா? இன்றே சூரிய ஒளி உன் மேல் விழும் கடைசி நாள்”

“ஹ. அப்படி ஒரு நிலை எனக்கு வருமானால் அந்தச் சூரியனே உன்னைச் சுட்டெரித்து விட்டுத் என்னைத் தன்னோடு கூட்டிச் செல்வான். “

“கனவு காணாதே கிருத்திகா . உன்னைக் காப்பாற்ற எந்த ப்ரித்விராஜ்ஜும் குதிரையில் வரப் போவதில்லை.”

இத்தனைப் பேசிக் கொண்டிருந்தப் போதும் கிருத்திகாவிற்கு பயமெல்லாம் வரவில்லை. ஏனெனில் செல்வம் பேசும்போது அவனின் கண்கள் அலை பாய்ந்த விதத்தில் அவன் எதையோத் தேடுகிறான் என்றுப் புரிந்துக் கொண்டாள். ப்ரித்விராஜ் சொன்னது போல் அவன் போதையைத் தான் தேடுகிறானோ என்றுப் பார்த்து இருந்தாள்.

அவளின் கணிப்பு சரியே என்பது போல் சற்று நேரம் அங்கும் இங்கும் அலைந்தவன் , அந்த அறை அலமாரியில் இருந்து ஒரு ஊசி எடுத்துப் போட்டுக் கொண்டான்.

இதற்குள்ளாக கிருத்திகா அவன் அறியாமல் தன் கையைக் காலை அசைத்து கட்டுக்களை அவிழ்க்க முயற்சி செய்தாள். இறுக்கிக் கட்டப்பட்டக் கைகள் அசைவில் வலித்தாலும் விடாது முயற்சித்தாள்.

அவளின் அதிர்ஷ்டம் இவளைச் சாய்த்து ஒரு மேஜைக்கு அருகில் உட்கார வைத்து இருந்தனர். அதனால் அதன் கூரிய முனை இவள் கைகளை அசைத்ததில் கயிற்றில் பட்டு லேசாக அறுபட ஆரம்பித்து இருந்தது.

செல்வம் கைகளில் போட்டுக் கொண்ட ஊசியில் திளைத்து மனம் மயங்க ஆரம்பிக்கும் முன், அவனின் போன் அடிக்க எடுத்தவன் முதலில் பேசாமல் வைத்தவன், பின் மீண்டும் அடிக்கவும் எடுத்துப் பேசினான்.

“இப்போ எதுக்கு போன் பண்ணினீங்க?”

“டேய் . நீ எங்கே இருக்க?

“ஏன் உங்களுக்குத் தெரியாதா? எல்லா பிளான் போட்டுக் கொடுத்தது நீங்க தானே?

“நான் என்னடா பிளான் பண்ணினேன்? உன்னை உன் பிரெண்ட்சோட டூர் தானே அனுப்பினேன்? “

“அதான் நீங்க அனுப்பின இடத்தில் தான் இருக்கேன்”

“பொய் சொல்லாத. உன் பிரெண்ட்ஸ் ஏர்போர்ட்லே வச்சு ரெண்டு பேரையும் போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்களாம். நீ எங்கே இருக்க?”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.