பண்ணிடுவாங்க. நான்-பெயிலபிள் கேஸ்லே போட்டுட்டா நிச்சயம் வெளியில் வர முடியாது. சொன்னதைக் கேளு” என்றுக் கெஞ்சிக் கொண்டிருக்க, அங்கே அவர் மகன் செல்வமோ வந்தக் கோபத்தில் தன் கையில் இருந்த செல் போனைக் கீழே போட்டு உடைத்தான்.
என்ன செய்வது சுற்றுமுற்றும் பார்த்தவன், அங்கிருந்த ஒரு இரும்புக் கம்பியை எடுத்துக் கொண்டு கிருத்திகாவை நோக்கி வந்தான்.
அப்படி வரும்போது அவன் கண்ணில் தோன்றிய வெறி, எதற்கும் அஞ்சாத கிருத்திகாவின் மனத்திலும் அச்சத்தைத் தோற்றுவித்தது.
“ஹேய். நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா? என்னமோ தனிப்படை எல்லாம் வராங்களாம். உன்னால அன்னிக்கு என்னைப் போறவன் வர்றவன் எல்லாம் அடிச்சான். அதிலும் உன் பிரெண்ட்டு மேலே ஆசிட் வீசுவேன்னு நீ போட்டுக் கொடுத்ததை வச்சு ஆளாளுக்கு போட்டு மிதிச்சானுங்க. மொத்த போலீஸ் எல்லாத்தையும் பந்தாடனும்ன்னு நினைச்சேன். சரியா எலெக்ஷன் வந்து கெடுத்துடுச்சு. யாரை என்ன செய்யறானோ இல்லையோ, உனக்கு சரியான பாடம் காட்டாம விட மாட்டேன் “ என்றபடி அவளை நெருங்கிக் கொண்டு இருந்தான்.
ப்ரித்வியும், கிரண் தேவியும் தப்பி இருக்க, அக்பர் அரண்மனையில் மிகுந்த கோபத்தில் இருந்தார்.
அவரின் தளபதியான அப்துல் ரஹீம் அறையில் இருக்க, அக்பர் அவரைப் பார்த்தார். அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்தவராக ,
“அந்தப் பெண் எங்குத் தேடியும் கிடைக்கவில்லை அரசே. “
“எப்படித் தப்பித்தாள்?’
“தாங்கள் உத்தரவிட்டப் பின் அரண்மனையில் இருந்து யாரும் வெளியேறவில்லை. உள்ளே வரவும் யாரையும் அனுமதிக்கவில்லை. ஜோதா மகாராணித் தவிர” என்றுக் கூறவும், தளபதியைக் கூர்ந்துப் பார்த்தார்.
“கோட்டைக் காவலனை வரச் சொல்” என்றார்.
அவன் வருவதற்குள் அக்பர் ஜோதா ராணி வந்து சென்றதை நினைவுப் படுத்திப் பார்த்தார்.
அக்பரிடம் காவலாளி ஜோதா வந்திருப்பதாக அறிவிக்கவும், வியந்த அக்பர் தன் உணர்வுகளை வெளிக்காட்டாத படி வரச்சொன்னார்.
ஜோதா உள்ளே வரவும், அக்பர் அவளை ஏறெடுத்துப் பார்த்தார்.
அவரின் கேள்வியை உணர்ந்தவளாக
“என்னை மன்னித்து விடுங்கள் அரசே. தங்கள் கட்டளையை மீர் நான் நம் அரண்மனை விட்டு வெளியே வந்தது தவறுதான்.” என்று மன்னிப்புக் கேட்டாள்.