(Reading time: 15 - 29 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

என்றார்.

“காகூ. நானும் யுத்தத்தில் பங்கேற்கிறேனே. “ என்றாள்.

“இல்லைப் பெண்ணே. சுற்றிலும் அத்தனை ஆண்களுக்கு இடையில் நீ மட்டுமே பெண்ணாக நிற்க வேண்டி இருக்கும் . அது சரி வராது”

“ஏன் அரசே? யுத்தத்தில் ஆண் என்ன? பெண் என்ன?” என்றுக் கோபமாகக் கேட்கவும்,

“கிரண். சொல்வதைக் கேள். பாதுகாப்பிற்கான பயிற்சிகள் வேறு. யுத்தப் பயிற்சிகள் வேறு. எங்களைப் பொறுத்த வரை ஜெயம் அல்லது வீர மரணம் மட்டுமே. ஆனால் உன்னைச் சிறைப் பிடித்தால் அத்தனை பேரும் ஆயுதங்களைக் கீழே போட நேரிடும். அதற்குப் பின் எல்லோரும் அடிமைகளே. அந்த நிலைமை நம்மால் எந்த ஒரு வீரனுக்கும் வரக் கூடாது. அதனால் செல்” என்றுக் கூற, தன் பெரிய தந்தையை வருத்தப் படுத்தி விட்டோமே என்றுக் கிரண் தேவியும் கலங்கினாள்.

“மன்னித்து விடுங்கள் காகூ. தங்கள் கட்டளைப் படி நடக்கிறேன்” என்றாள்.

“சரி. சரி. புறப்பட ஆயத்தமாகு. “ என்றவர்,

“யுத்தம் நல்லபடியாக முடிந்த பின் உனக்கும் , பிகானர் இளவரசருக்கும் திருமணம் முடிக்க அந்தப் பவானித் தாயை வணங்கிக் கொள்” என இருவரும் திகைத்தனர்.

ப்ரித்விராஜ் “ அரசே.. அது வந்து.. தங்களிடம் எப்படிச் சொல்ல என்று தயங்கி இருந்தேன்” என்று கூறினான்.

ஹ. ஹ என்றுப் பெரிதாகச் சிரித்த ராணா,

“என் கண்களிலிருந்து எதுவும் தவறுவதில்லை இளையவர்களே” என்றார்.

பின் “இன்னும் சற்று நேரத்தில் புறப்பட ஆயத்தமாகு கிரண் தேவி” எண்டு விட்டுச் சென்று விட்டார்.

அவர் பின்னே ராம்சிங், காமினி இருவரும் சென்று விட, கிரண் தேவி மற்றும் ப்ரித்விராஜ் மட்டும் இருந்தனர்.

ஒரு பெருமூச்சுடன் “தேவி, இன்னும் நாம் திருமணம் செய்து கொள்ளாத இந்த நிலையில் , இந்தப் போர் முனையில் எனக்காகக் காத்திரு என்று சொல்ல என்னால் இயலவில்லை. தற்போது நீ பிகானர் சென்று பாதுகாப்பாக இருந்துக் கொள். போர் முடிந்து திரும்பி வந்தால் பார்த்துக் கொள்ளலாம். அல்லது எனக்கு ஏதேனும் ஆகி விட்டால் நீ வேறு நல்ல வரனை மணம் செய்து கொள்ள வேண்டும்” என்றுக் கூறவும்

கிரண் தேவி செய்கையால் அவனின் பேச்சை நிறுத்தினாள்.

“இளவரசே , தாங்கள் வெற்றியுடன் திரும்பி வருவீர்கள் என்ற நிச்சயம் எனக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.