(Reading time: 15 - 29 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“ஒஹ். ஷிட். எப்படி மாட்டிகிட்டாங்க?”

“அத நீதான் சொல்லணும். நீ ஜெய்பூர் வில்லாவில் தானே இருக்கேன்னு போன் பண்ணிருந்த? “

“அங்கே தான் இருக்கேன்.”

“ம்ம்ச். டேய் அங்கே உன்னை அர்ரெஸ்ட் செய்ய வரதா நியூஸ் வந்துருக்கு”

“எப்படி? எதுக்கு?

“நீ இருந்த ஜெய்பூர் வில்லாவில் இருந்து நம்ம கஸ்டமருக்கு கொடுக்க வச்சிருந்த போதை மாத்திரை எல்லாத்தையும் சீஸ் பண்ணிருக்காங்க?

“எப்படி முடியும்? அதை நான் எடுத்துட்டு வந்தது என் பிரெண்ட்ஸ்கேத் தெரியாதே?”

“முட்டாள். அதை அவனுங்க கண்டுபிடிச்சுட்டானுங்க. உனக்குத் தெரியாமல் அதை எடுத்துட்டுப் போயிருக்காங்க. ஏர்போர்ட்டில் மாட்டிகிட்டாங்க”

“நோ...” என்றுக் கத்தியவன்,

“சரி. அதுக்கு என்னை எப்படி அர்ரெஸ்ட் பண்ண முடியும்? அவனுங்க வச்சிருந்ததுக்கு என்னைக் கையக் காட்டினா நான் என்ன செய்ய முடியும்னு கேட்க வேண்டியதுதானே”

“லக்கேஜ் செக் பண்ற இடத்துக்கு நாம நேரடியா பொருளை எடுத்துட்டுப் போக மாட்டோம். அதனால் தான் உன்னை ட்ரெயினில் அனுப்பி வைச்சேன். இது தெரியாத அந்த முட்டாள் பசங்க ஏர்போர்ட் எடுத்துட்டு போயி மாட்டிகிட்டாங்க. அதோடு அவங்க விசாரிச்சதில் எங்கே வந்தோம், ஏன் வந்தோம்ன்னு எல்லாம் உளறிட்டானுங்க. நம்ம நல்ல நேரம். அங்கே கஸ்டம்சில் ஒருத்தன் நம்ம ஆள் ஒருத்தன் இருக்கான். அவன் உன் பேர் அஅடிபடுறத வச்சு எனக்கு சொல்லிட்டான். இனி உன்னைத் தேடி வரதுக்குள்ளே அந்தப் பொண்ண அப்படியே விட்டுட்டு தப்பிச்சுரு.”

“என்னாலே முடியாது. எத்தனை நாள் கஷ்டப்பட்டு இவளை கடத்திருக்கேன் தெரியுமா? இனி இவ கிட்டே நெருங்க சந்தர்ப்பம் கிடைக்காது. நீ எப்படியாவது உன் பவர் யூஸ் பண்ணி வரவங்கள தடுத்து நிறுத்து. நான் என் வேலை முடிஞ்சதும் இங்கேர்ந்து போயிடறேன். “

“சொன்னாக் கேளுடா. அங்கே உன்னை அர்ரெஸ்ட் பண்ண டெல்லி போலீஸ் மட்டுமில்லை இங்கேருந்து தனிப் படை ஒன்னும் வந்துட்டு இருக்காங்க. நிச்சயம் ரவுண்டு அப் பண்ணிடுவாங்கன்னு நியூஸ் வருது.”

“நோ. நான் நினைச்சதை முடிக்காம விடமாட்டேன்.”

“வேண்டாம் டா. இப்போ நீ தப்பிக்கிறது தான் முக்கியம். அங்கேருந்தா நிச்சயம் அர்ரெஸ்ட்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.