(Reading time: 15 - 29 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“அதற்கு தற்போது என்ன அவசியம்?”

“என் அரண்மனையில் இருந்து காணமல் போன பெண்ணைப் பற்றித் தகவல் எதுவும் கிடைத்ததா என்று அறியவே வந்தேன்”

“சாதாரண பணிப்பெண்ணிற்காக ஆம்பர் இளவரசி, அக்பரின் பிரிய ராணி அரண்மனை விட்டு இறங்கி வர வேண்டுமா? அந்த அளவிற்கு என்ன முக்கியம் அந்தப் பெண்ணில்?”

ராணாவின் செல்லப் பெண் என்று சொல்லலமா என்று யோசித்தவர் , வேண்டாம் என்று முடிவு செய்து

“ஒருவகையில் அவள் எனக்கு தூரத்து உறவு. என்னை நம்பி அனுப்பி இருக்கிறார்கள். நான் பதில் சொல்ல வேண்டுமல்லவா? “ என்று மட்டும் கூறினாள்.

“எனில் அவளின் பொறுப்பு என்னையும் சேர்ந்ததே. கவலைப்படாமல் செல்லலாம். தகவல் கிடைத்ததும் தெரிவிக்கிறேன்” என்றுக் கூறவும் ஜோதா கிளம்பினாள்.

“வருகிறேன் அரசே” என்றாள்.

“இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும். இனியொரு முறை அந்த அரண்மனையிலிருந்து நீ வெளியேறினால் நடப்பதற்கு நான் பொறுப்பல்ல” என்று அக்பர் கூறவும்,

“மன்னியுங்கள் அரசே. இனி இது போல் நடக்காது.” என்றபடிக் கிளம்பிவிட்டாள்.

இதை எண்ணியபடி இருந்தபோது கோட்டைக் காவலன் வர,

“ஜோதா ராணியோடு யார் யார் வந்தார்கள்?”

“சில வீரர்களும், பணிப்பெண்களும் வந்தார்கள் அரசே”

“எல்லோரும் கோட்டைக்குள் வந்தார்களா?

“இல்லை அரசே. வீர்கள் வாயிலில் நிறுத்தப்பட்டனர். பணிப் பெண்களிலும் சிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.”

“கோட்டைக்குள் வரும்போது எத்தனைப் பணிப்பெண்கள் வந்தனர்?”

“கணக்கெடுக்கவில்லை அரசே” என்றுக் கூறவும், காவலனை முறைத்த அக்பர்,

“வெளியில் செல்லும்போதாவது கவனித்தீரா?’ என்றுக் கேட்டார்.

“ஐந்துபணிப்பெண்கள் சென்றார்கள் அரசரே”

“அவர்களை விசாரிக்கவில்லையா?”

“இல்லை அரசே. அவர்கள் ஜோதா ராணியோடு வந்தவர்கள் என்று எண்ணினோம்”

“ஹ்ம்ம்” என்று மட்டும் கூறிவிட்டு, தலையசைத்து வெளியேறச் சொன்னார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.