(Reading time: 14 - 27 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

அப்படி நான் செத்து போயிட்டால் யாருக்கு லாபம்?”

யாருக்கு?”

உங்களை திருமணம் செய்துக்கணும்னு யாராச்சும் நினைச்சிருக்கலாம் அல்லவா?”

எப்படிஎப்படி? எனக்காக உன்னை கொலை செய்ய நினைக்கிறார்களாக்கும். அப்பதான் ரூட் கிளியராகுமாக்கும். நாமதான் ஏற்கனவே விவாகரத்து ப்ராஸசில் இருக்கிறோமே?”

ஆமாம்ஆனால்…”

அவர்கள்  என்னையும் கொல்லத்தான் நினைத்தார்கள்”

அப்போ கண்டிப்பாக பழி வாங்கும் முயற்சியாகத்தான் இருக்கும்

பழி வாங்கும் அளவிற்கு நான் எதுவும் செய்யவில்லை தாயேஇது ஏதாவது சொத்து தகராறாக இருக்கும். உனக்கு ஏதாவது சொத்துக்கள் இருக்கா? தாத்தா எழுதி வச்சிருக்காறாரா?”

அப்படியெல்லாம் இல்லை. அந்த வீடுமட்டும்தான் இருக்கு. அதெல்லாம் கொலை செய்யற அளவிற்கு மதிப்பு மிக்கது கிடையாதுநான் நினைக்கிறதுதான் கரெக்ட்

கரெக்ட்தான்நான் ஒரு பெண்ணை காதலிச்சு ஏமாற்றி கைவிட்டேன்ல அவள் சார்பாக யாரோ பழி வாங்குறாங்க… போதுமா?”

ஆங்…  நான் அப்படி சொல்லவில்லை. ஒரு தலையாக காதலிச்சு…”

அதுக்கு எதுக்கும்மா கொலை செய்யணும்?. நான் அப்படி  ஒண்ணும் அட்ராக்டிவ் கிடையாது. எந்த பொண்ணும் என்னை காதலிச்சதும் இல்லை

அது எப்படிஉங்ககிட்ட சொல்லாம இருந்திருப்பாங்க. உங்களை யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா?”

உனக்கே பிடிக்கலை…”

எனக்கு பிடிக்கலைன்னு எப்ப சொன்னேன். ம் ஞாபகம் வந்துடுச்சுஅன்னிக்கு நைட் உங்களை திட்டினேன்ல.”

ரொம்ப சாதாரணமா சொல்றியேமா? திட்ட மட்டுமா செஞ்சேகைக்கு கிடைத்ததையெல்லாம் என்மீது வீசியெறிந்து கொலை செய்ய  முயற்சிகூட செய்தாய்.”

மன்னிச்சுங்கநான் ரொம்ப வருத்தப்படறேன். அப்படி செய்திருக்க கூடாது. ஆனால்  அப்போது நான் ரொம்ப மூட் அவுட்டாக இருந்தேன். கொஞ்சம் பயமும் இருந்தது.”

இருக்கும் இருக்கும்நான்தான் உலகத்துல இருக்குற சாமியெல்லாம் வேண்டிகிட்டு உட்கார்ந்திருந்தேன். அந்த ரூமை விட்டு முழுசா வெளிய வருவேனான்னு இருந்துச்சு

ரொம்ப சாரிசாரிஉங்களை தப்பா நினைச்சிட்டேன். இப்போ புரியுது. நீங்க ரொம்ப நல்லவர்

ஜனாதிபதி அவார்டுக்கு சிபாரிசு செய்மா!. ரொம்ப நல்லவர்ர்ர்டைட்டில்க்கு

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.