(Reading time: 14 - 27 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

அவரும் லவ்வபிள் கேரக்டர்தான். அப்படி ஒரு ஸ்மார்ட்…”

ரொம்ப பிரில்லியண்ட். ஜெர்மன்ல போய் படிச்சார். கன்ஸ்ட்ரக்ஸன் தொழில் செய்தார். பெரிய பிஸினஸ் மேக்னட். ரொம்ப க்ரியேட்டிவாக இருப்பார். ஜெர்மன்ல நிறைய கட்டிடங்களை வடிவமைச்சிருக்கார்.”

ஏன் அந்த ஊரில் ஆட்கள் இல்லையா?”

அவருடைய ஸ்பெஷல் டெக்னிக் இந்தோ-ஜெர்மன் கலாச்சாரம் கலந்து வீடுகளை அமைப்பார். இதெல்லாம் பின்னாளில் நான் தெரிந்து கொண்டது. அங்கிருக்கும் ஒரு ஹோட்டலுக்கு சென்றிருந்தேன், நம்முடைய மகாபாரத தீம் கொண்டு அமைக்கப்படிருந்தது. ஆச்சரிமாக அதோட வடிவமைப்பாளர் பற்றி விசாரித்தால் என்னுடைய மாமா என்று தெரிய வந்தது. அதுவும் ரொம்ப வருடங்களுக்கு   முன்பே இதை செய்திருக்கார்.“

அவரைபற்றி ரொம்பவும் பெருமை பேசறீங்க?”

அவர் என்னோட சின்ன வயசு ரோல் மாடல். பார்த்தாலே எனர்ஜிடிக்கா இருக்கும். ஆனால் ஒரு ப்ளைட் ஆக்ஸிடெண்டில் இறந்துட்டார். அவர் முகம்கூட கனவுபோல நினைவில் இருக்கு. ஆனால் அவர் இறந்த அதிர்ச்சியை என் அம்மாவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. என் அண்ணன் செத்துட்டாருஅண்ணன் செத்துட்டார்னு கத்திகிட்டே இருப்பாங்க. ஒரு கட்டத்துல மைண்ட் டிஸ்டர்ப் ஆயிட்டாங்க. எங்க யாரையும் அவருக்கு நினைவில்லாமல் போயிட்டது. அதிலும் என்னையும் மகியையும் பார்த்தாலே கத்த ஆரம்பிச்சுடுவாங்க.”

“--------“

அப்போல்லாம் அப்பா அம்மாவை பார்த்துக்குவார். நான் மகியை பார்த்துக்குவேன். அவளும் சின்ன பெண்தான். எட்டு வயதிருக்கும். அம்மாவை பார்த்தாலே பயந்து அலறுவாள். அதனாலேயே மகிக்கும் எனக்கும் ஒரு அட்டாச்மெண்ட் வந்துடுச்சு.”

நான் இதை எதிர்பார்க்கல. உங்களுடைய குடும்பம் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டதுன்னு நினைச்சேன். புயல்இடியெல்லாம் வந்திருக்காதுன்னு நினைச்சேன்

உண்மையை சொல்லப் போனால் அந்த மோசமான காலகட்டத்துலதான் நாங்கள் ஒவ்வொரும் எங்களுடைய வாழ்க்கையை புரிந்து கொண்டோம். எங்களுடைய அன்புதான் அம்மாவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தது.”.

அத்தைக்கு அவங்களோட அண்ணன்மீது எவ்வளவு பிரியம் இருந்திருந்தால் புத்தி கலங்கி போகும் அளவிற்கு நிலை மாறி இருக்கும். அண்ணன் தங்கைன்னா அப்படித்தான் இருக்கணும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.