(Reading time: 14 - 27 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

எனக்கு ஒரு அண்ணன் இருந்திருந்தால்  நன்றாக இருந்திருக்கும்

அப்படின்னு இல்லை அதிதி. ஒவ்வொருவருக்கும் யாராவது ஒருவரை ஆதரவாக கடவுள் அனுப்பி இருப்பார். நாம்தான் அது யார்னு புரிஞ்சிகிட்டு அவங்களை விட்டு விலகாமல் இருந்துக்கணும். ஆத்மார்த்தமான உறவுகளுக்கு சோதனைகள்  நிறைய வரும். சந்தேகம்பழிஅவச்சொல்பொறாமை அத்தனையும் அந்த உறவை எடைபோட்டு பார்க்கும். நாம்தான் அவற்றிலிருந்து விலகி நின்று உண்மையை புரிந்து கொண்டு நடந்துக்கணும்.”

கரெக்ட்சும்மா ஆத்மார்த்தம்னு சொல்லக் கூடாது. மோசமான சூழலிலும் புரிதல் இருக்கணும். அப்பாவிற்கு அம்மாவிடம் அது இல்லாமல் போயிடுச்சு

ம்… அதையே பேசிட்டு இருக்க வேணாம் அதிதி… இனி என்ன செய்வது என்று பார்க்கலாம்அவர்கள் பேசிக் கொண்டே  நடந்தபோது காலில் எதுவோ தட்டுபட அதிதி ஆர்வமுடன் அதை எடுத்தாள்.

ரதன், இதுதான் எங்களுடைய விளையாட்டு இஞ்ஜெக்ஸன்.”

அப்படின்னா

இது ஒரு ஈச்ச மரத்து குச்சியில் செய்றது. குழல்போன்ற அமைப்பில் இருக்கும். இதை ஊசிபோல மாற்றுவோம். இப்படி அமுக்கினால் நுனியில் சொருகப்பட்டிருக்கும் ஊசிபோன்ற குச்சி அம்புபோல பறக்கும்

இதுதான் அந்த ஊதூசியா? அவனை தாக்கியது இதுதானா?

இதை யார் செய்வார்கள்?”

எல்லோரும் செய்வோம். விளையாட்டுக்குத்தானே.”

உனக்கு இந்த மூலிகைகள் பற்றி தெரியுமா? என்னை பாதித்தது எதுவென்று தெரிந்து கொள்ளனும்”

ஒன்றிரண்டுதான் தெரியும். ரொம்பவும் தெரியாது. எனக்கு நேர்ந்தது போல  மயக்கம் வரவைக்க சில மூலிகைகள் இருக்கு. உங்களுக்கு  நேர்ந்ததுபோல மரத்துபோக செய்யும் மூலிகைபற்றி தெரியாது.”

சில மெடிசன் இருக்கு. ஆனால் அவை இவ்வளவு துல்லியமாக செயல்படாது. குறிப்பிட்ட அளவு உடலில் செலுத்த வேண்டும். ஆனால் இது ஒரு துளிபட்டாலே எவ்வளவு வீரியமாக இருக்கறது.”

நான் அல்லி பாட்டிகிட்ட கேட்டு வைக்கறேன். அவங்களுக்கு இதெல்லாம் தெரியும்

இருவரும் பேசிக் கொண்டே மலை சரிவில்  நடக்க, திடீரென்று அதிரதன் நின்றான்.

அது அந்த இடம்தானே?” அவன் சுட்டிகாட்டிய திசையில் தொலைவில் ஒரு மரத்தின் மீது

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.