(Reading time: 14 - 27 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

பரண் தெரிந்தது.

ஆமாம் அது நாம இருந்த பரண்தான்

அப்படியா வா நாம் அங்கே போகலாம்அவளுடைய கையை பிடித்துக் கொண்டு மலை சரிவில் புதர்களுக்கிடையே இறங்க எத்தனித்தான்.

ரதன், என்ன செய்றீங்க?” அவள் பதறினாள்.

நாம் இன்னும் ஒரு நாள் இந்த காட்டில் இருக்க வேண்டும். அப்போதுதான் கோர்ட் ஆர்டரை முழுமை செய்ததுபோல இருக்கும்.”

ரொம்ப முக்கியம்இனி ஒரு நிமிடம்கூட இந்த காட்டில் தங்கி இருக்க நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.”

ஆனால் நான் இருப்பேன்என்றவன், சரிவை நோக்கி நடக்க, அதிதி பதட்டத்துடன் கெஞ்சினாள்.

வேண்டாம்,   நடந்தவரை போதும். வீட்டிற்கு போகலாம்

அப்ப நம்ம டைவர்ஸ்…”

அதை அப்புறமா பார்த்துக்கலாம். உங்களை மாமாகிட்ட நல்லபடியா அனுப்பி வைத்தால் போதும்னு ஆயிடுச்சு:”

இப்போ இப்படி சொல்லிட்டு அப்புறமா மாத்தி பேசுவேஅவன் தன் நோக்கத்தில் குறியாக இருக்க,

இல்லை. விவாகரத்து வேண்டாம். உண்மையா சொல்றேன். ப்ளீஸ் நீங்க வாங்க. வீட்டிற்கு போகலாம்.”

வேண்டாமாவேண்டாமாபிறகு என்ன செய்யப் போகிறாய்?”

அப்புறமா பார்த்துக்கலாம். இப்போ வீட்டுக்கு போகலாம்அந்த வில்லன்கள் வந்து விடுவார்கள் என்ற  பயம் வந்து விட்டதுபோலசுற்றும்புறமும் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டே பேசினாள்.

அவளுடைய பதட்டத்தினை ரசித்தபடி, “சரி சரி வீட்டிற்கு போகலாம்என்றவன் மலைப்பாதையில் நடக்க ஆரம்பித்தான்.

அவ்வளவு என்ன பயம்?”

உங்களுக்கு எதுவும் கெட்டதாக  நடந்துவிடக் கூடாது.”

அப்போ என்மீது உனக்கு அன்பு இருக்குதானே

அதெல்லாம் இல்லை. மாமாவும் அத்தையும் உங்களுக்கு எதுவொன்று  நடந்தாலும் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். “

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.