(Reading time: 15 - 29 minutes)
Kaarigai
Kaarigai

தொடர்கதை - காரிகை - 13 - அமுதினி

இடை வரும் பலவித தடைகளை

தகர்த்திங்கு  வாழ்ந்து  காட்ட  வேண்டும்

இலக்கிய  பெண்ணுக்கு  இலக்கணம்

நீயென  யாரும்  போற்றவேண்டும்

மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம்

மானம் காக்கும் மாந்தர் யாருக்கும்

மாலை வாங்கி போடுவோம்

ரு வித நடுக்கத்துடன் இங்கு வர தயாராகி சத்யாவுக்காக காத்திருந்த பவித்ராவின் அறைக்குள் வந்த சத்யா,"பவித்ரா நான் ரெடி. போலாமா? " என்று வந்து நிற்க, அவள் எழுந்து நின்றாள். அவள் முகம் அவளின் அகத்தை காட்டியது. அவளின் முகத்தை பார்த்த சத்யாவுக்கு மனதை கல்லாக்கி கொள்ள வேண்டியிருந்தது.

"என்ன என்னையே பார்த்துக்கிட்டு இருக்க? சீக்கிரம் போலாம். அங்க போயிட்டு வந்து தான் நான் ஆபீஸ் கெளம்பனும்" சத்யாவின் பேச்சை கேட்ட பவித்ராவுக்கு சங்கடமாக இருந்தது. இதற்காக தான் அவள் அவனின் உதவி வேண்டாம் என்று இருந்தாள் . முகம் சுருங்க, தன கைப்பையை எடுத்து கொண்டு அவள் கிளம்ப, "அந்த ஆள் கிட்ட என்ன எல்லாம் பேசணும்னு யோசிச்சுட்டியா? " முன்னே நடந்தபடி சத்யா கேட்க, விழித்தாள் பவித்ரா.

"என்ன பவித்ரா, எல்லாத்துக்கும் இப்படி முழிச்சா? அங்க போயி இதே மாதிரி முளிச்சிட்டு நின்னா அவன் ஈஸியா அந்த ஆஸ்ரமத்தை காலி பண்ணிட்டு போயிட்டே இருப்பான். நீ எல்லாம் எப்படி தான் இந்த மாதிரி பெரிய பொறுப்பை எல்லாம் எடுத்துகிட்டியோ?" அவன் பேசிக்கொண்டே நடக்க, அதுவரை இருந்த பயம் எல்லாம் ஒருபுறம் ஒதுங்கி கொண்டது அவளின் தன்மானம் சுட்டதில்.

"எனக்கு இதெல்லாம் தெரியாது தான். ஆனா என்னால இதை ஹாண்டில் பண்ண முடியும். நீங்க உங்களுக்கு வேலை இருந்தா நீங்க கிளம்புங்க. நான் பார்த்துக்கறேன்." முடிந்தளவு அவளின் கோவத்திதை அடக்கி கொண்டு சொன்னாள் . "ஹ்ம்ம்...பேசறது எல்லாம் நல்லா தான் பேசற. ஆனா இப்படி வெறும் வாய் பேச்சால இந்த பிரச்னையை தீர்க்க முடியாது ...சரி ஓகே. இது உன் பிரச்சனை...அதை எப்படி தீர்க்க போறேன்னு நீ தான் யோசிக்கணும். அம்மா உன் கூட போக சொன்னாங்க...சோ நான் வரேன் அஸ் எ டிரைவர். அவ்ளோ தான்" காரின் டிரைவர் இருக்கையில் அமர்ந்தவன் அவள் ஏறுகிறாளா  என திரும்பி பார்க்க, காரின் பின் பக்க கதவை திறந்தாள் பவித்ரா.

"அஸ் எ டிரைவர்ரா வர்றேன்னு சொன்னேன்ங்கிறதுக்காக அதை ப்ரூப் பண்ண பாக்கறியா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.