(Reading time: 15 - 29 minutes)
Kaarigai
Kaarigai

டாக்குமெண்ட் இல்ல அப்படினு எல்லாம் யாரோ சொன்னதை நம்பி இந்த வேலைல இறங்கிட்டிங்க. ஆனா என்ன பண்றது நீங்க இல்லைனு நெனைச்ச எல்லாமே எங்க கிட்ட இருக்கு. அதான் சட்டப்படி போலாம்னு முடிவு பண்ணி உங்க நோட்டீஸ்க்கு பதில் நோட்டீஸ் ரெடி பண்ணி நேரிலேயே உங்க கிட்ட கொடுத்துட்டு போலாம்னு தான் வந்தோம். உங்களை பார்த்தாலும் பாவமா தான் இருக்கு, என்ன பண்ணலாம்?" யோசிப்பவனை போல தாடையை தேய்க்க, கமலக்கண்ணனின் முகம் அஷ்டகோணலாகியது.

"நீங்களே சொல்லுங்க சார் என்ன பண்ணலாம்?" அவனை போலவே பேசிய சத்யா "வேணா ஒன்னு பண்ணலாம். நீங்க உங்க நோட்டீசை வாபஸ் வாங்கிடுங்க. சோ நாங்க உங்க மேல எதுவும் போர்ஜெரி கேஸ் போடாம இருக்க முயற்சி பண்றோம். ஏதோ எங்களால் முடிஞ்சது இது தான் சார்" அமைதியாக பேசுபவனை போல்பேசிய சத்யா, "எதுக்கும் உங்களுக்கு தேவை படும்னு எங்க ஆஸ்ரம லேண்ட்டுடைய பிரென்ட் டாக்குமெண்ட் காபி கொண்டு வந்துருக்கேன். டைம்  கிடைக்கும் போது  படிச்சு பாருங்க" என அவன் முன் சில பேப்பர்களை இட்டவன் "போலாம் பவித்ரா" என முன்னே நடக்க அவனை தொடர்ந்து வெளியே வந்தாள்  பவித்ரா.

அந்த காரில் அமைதி. ஆனால் வரும் போது இருந்த அமைதிக்கும் இப்போது இருக்கும் அமைதிக்கும் ஏதோ பெரிய வித்தியாசம் இருப்பது போல தோன்றியது பவித்ராவுக்கு. இதோ இப்போதும் சத்யாவின் புருவங்க யோசனையில் இருப்பதை காட்டும் விதமாக நெரித்திருந்தது அப்போது இருந்தது போலவே. ஆனால் அவளின் மனநிலை மாறி இருந்தது. வரும்போது  அவன் மீது இருந்த கோபம் இப்போது ஆச்சர்யமாக மாறி இருந்தது..வரும்போது அவளுக்கு இருந்த பயம் குழப்பமாக மாறியிருந்தது. அவன் வீட்டில் இருந்து கிளம்பும் வரையுமே இவள் அந்த ஆஸ்ரமத்தின் டைரக்டர் என்று அவன் சொல்லவில்லை. இன்னும் சொல்ல போனால் அவன் இதற்க்கு பின் செய்த வேலைகள் எதை பற்றியும் சொல்லவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அவளுடைய தன்மானத்தை தூண்டுவது போல இருந்தது அவனின் பேச்சு. எனக்கு தெரியாமல் நான் எப்படி டைரக்டர் ஆனேன்? அவனிடமே கேட்கலாம் என எண்ணி அவன் முகம் பார்த்தாள். அவன் முகம் இன்னும் யோசனையில் தான் இருந்தது. கேட்கலாமா வேண்டாமா எப்படி கேட்பது என ஆயிரம் முறை யோசனை செய்து சரி கேட்கலாம் என முடிவு செய்து அவள் வாயை திறக்க, "பவித்ரா, நான் வீட்டு கிட்ட ட்ரோப் பண்ணிடறேன். எனக்கு மீட்டிங் இருக்கு நான் சீக்கிரம் ஆபீஸ் போகணும். ஈவினிங் வந்து அம்மாகிட்ட பேசறேன்னு சொல்லிடு "என்றவன் அவர்கள் வீட்டின் அருகே வண்டியை நிறுத்த, அதன் பின் அவனிடம் எதுவும் கேட்காமல் இறங்கி கொண்டாள்  பவித்ரா அவள் வருவதற்காக காத்திருந்த லட்சுமி "என்னம்மா பவித்ரா, அந்த ஆளை பார்த்திங்களா? என்ன சொன்னான்?"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.