(Reading time: 15 - 29 minutes)
Kaarigai
Kaarigai

முன்னாடி உக்காரு" சத்யாவின் குரலில் பல்லை கடித்து கொண்டு முன்னே அமர்ந்தாள் பவித்ரா.

அவளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அவளின் இப்படி ஒரு முகத்தை அவன் பார்ப்பது இதுவே முதல் முறை.

அந்த பயணத்தின் இடையில் இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பவித்ராவுக்கு அவளின் நடவடிக்கைகள் அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது. இதற்க்கு முன் எப்போது அவள் இப்படி ஒருவர் மேல் கோவம் கொண்டிருக்கிறாள்? எத்தனை யோசித்தாலும் அவளுக்கு விடை எதுவும் கிடைக்கவில்லை. அவன் சொன்னது உண்மை தானே. இது என் பிரச்சனை..இதை நான் தான் சரி செய்யவேண்டும்...அதை அவன் சொன்னதில் எனக்கு ஏன் கோவம் வந்தது? அவள் பார்வை ஒரு முறை அவளறியாமலேயே அவனிடம்  சென்றது.அவன் ஏதோ ஒரு தீவிர யோசனையில் இருந்தான். அவன் முன் காய்ந்த டாஷ்போர்டில் ஒரு பைல் இருந்தது. எதுவும் அலுவலக வேலைக்கானதாக இருக்கும் என்று எண்ணினாள்.

அந்த பெரிய வீட்டின் முன் கார் நின்றது. ஒரு முறை தன் அருகில் அமர்ந்திருந்த சத்யாவை பார்த்தாள் பவித்ரா.

"இது தான் வீடு. கீழ இறங்கு பவித்ரா" தன் கையில் இருந்த பேப்பர்களை எல்லாம் எடுத்தபடி சத்யா சொல்ல, அதற்கும் மேல் தயங்கி நிற்க வழியில்லாமல் இறங்கினாள் பவித்ரா.

ஒரு குட்டி பங்களாவை போல இருந்தது வீடு. கீழே இறங்கியவள் மெல்ல தயக்கத்துடன் அந்த வீட்டின் கதவில் கையை வைத்தாள்.

"யாரும்மா அது என்ன வேணும்?" என்றபடி ஒரு வயதான செக்யூரிட்டி வெளியே வர "மிஸ்டர் கமலக்கண்ணனை பார்க்கணும். " வறண்டு போன தொண்டையில் இருந்து மெலிதாக வந்தது சத்தம். அவளை மேலும் கீழுமாக பார்த்த செக்யூரிட்டி அவள் பின்னே நின்றிருந்த சத்யாவின் பார்வையில் "உள்ளே போங்க" என்று கதவை திறந்து வழி விட்டார்.

வழியே இருந்த அழைப்பு மணியை அழுத்தினாள். இரண்டொரு நிமிடங்களுக்கு பின் ஒரு பெண் கதவை திறந்தாள்.

"யாருங்க யாரை பாக்கணும்?" முழுவதுமாக திறக்காத அந்த கதவின் வழியே தலையை வெளியே நீட்டி கேட்ட அந்த பெண்ணிடம் "கமலக்கண்ணன் சாரை பாக்கணும்" பவித்ரா பதில் சொல்ல, "உள்ள வாங்க. இங்க உக்காருங்க. நான் அய்யாவை வர சொல்றேன் "என்றுவிட்டு உள்ளே செல்ல, பவித்ரா தயங்கியபடி நிற்க, சத்யாவோ எனக்கென்ன வந்தது என்று அங்கு இருந்த சோபாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தான். அவன் அமர்ந்ததை கண்டவள் அங்கிருந்த இன்னொரு இருக்கையில் ஒரு ஓரமாக அமர, மேலிருந்து ஒரு நாற்பது வயது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.