(Reading time: 8 - 15 minutes)
Kaarigai
Kaarigai

தொடர்கதை - காரிகை - 17 - அமுதினி

மாற்றங்கள் ஒன்றே தான் மாறாது

கண்ணீரில் தாகங்கள் தீராது

நம்பிக்கையே உன் கை ரேகை

உன் கேள்விக்கு என்றும் நீயே விடை

மண்பானையாக உடையாதே

வாழ்கின்ற காலத்தே வாழ்வாய் நீயே    

வித்ராவின் அதிர்ந்து நின்றிருந்தாள். சத்யா அப்படி சொல்வான் என்று அவள் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை தான். ஆனால் அவன் அப்படி சொல்லுகையில் அவள் மனம் அதை உள்ளூர ஏற்றுக்கொள்ள ஏங்கியது தான் அவளை மேலும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது.

தன் நிலை என்ன, தகுதி என்ன என எதை பற்றியும் கவலைப்படாமல் தன மனதில் இப்படி ஒரு எண்ணம் எப்படி வந்தது? அது எப்போதிருந்து வந்தது? ஆண்களையே வெறுத்த தன்னால் எப்போது சத்யாவை வெறுக்கமுடியாமல் போனதோ அப்போதே அந்த மாற்றம் மனதில் உண்டாகியிருக்க வேண்டும் என்பது புரிந்தது அவளுக்கு.

ஆனால்...இல்லை...இதெல்லாம் இதோடு முடிவதில்லை. வேண்டாம்...நான் இப்படியே இருப்பது தான் எனக்கும் நல்லது சத்யாவுக்கு நல்லது...தன்னுடைய பதிலுக்காக காத்திருப்பவன் முன் இப்படி அதிர்ந்து நிற்பதால் எந்த பயனும் இல்லை என்று உணர்ந்தவள் தன் மனதை மறைத்து முகமூடியை அணிந்து கொண்டாள்.

"இதெல்லாம் சரி பட்டு வராது சத்யா. இப்படி எல்லாம் நடக்க கூடாதுனு தான் நான் இங்க இருந்து போறேன் போறேன்னு சொன்னேன். ஆனா நீங்களும் அம்மாவும் ஏதோ ஒரு காரணம் சொல்லி என்னை இங்க இருக்க வெச்சீங்க. எனக்கு இதுல விருப்பம் இல்லை" பொறுமையாக நிதானமாக சொன்னாள் பவித்ரா.

அவளிடம் இருந்து கோவம், அழுகை என எதிர்பார்த்தவனுக்கு அவளின் இந்த நிதானம் சற்றே வியப்பை அளித்தது.

"ஏன் வேணாம் பவி? என்னை பிடிக்கலையா? என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு இஷ்டம் இல்லையா? என்ன காரணம்னு சொல்லு" சத்யா கேட்கவும் பவித்ராவுக்கு அவனை பிடிக்காது என சொல்வது கூட கஷ்டமாக இருந்தது.

"எனக்கு கல்யாணமே பிடிக்காது சத்யா. தயவு செய்து நீங்க என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புல தலையிடாம இருங்க" இப்போது குரலில் கடுமையை வரவழைத்து கொண்டாள்.

"சாரி பவி. என்னால இந்த பதிலோட சமாதானம் அடைந்து போக முடியாது. நீ என் கேள்விக்கு சரியான பதில் சொன்னா நான் உன்னை தொந்திரவு பண்ண மாட்டேன்." சத்யா மீண்டும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.