(Reading time: 8 - 15 minutes)
Kaarigai
Kaarigai

அவள் செல்வதயே பார்த்து கொண்டிருந்த சத்யாவின் அருகே வந்து அவனின் தோளில் கைவைத்தார் லட்சுமி.

“சத்யா நீ உன் ரூம்க்கு போ. அவ கொஞ்சம் யோசிக்கட்டும். காலைல பேசிக்கலாம். நீ வந்து சொல்வேன்னு அவளும் எதிர்பார்த்திருக்க மாட்டா ல..." அவர் சொல்வதும் சரி என்றே தோன்றியது சத்யாவுக்கு.

மீண்டும் அவளின் அறையை பார்த்தவன் எப்படியாவது அவளை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று எண்ணியபடி அவன் அறைக்கு சென்றான்.

 அங்கிருந்த டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த உமாவை கண்ட லட்சுமி, "உமா குட்டி நீ போயி தூங்கு. நாளைக்கு ஸ்கூல் இருக்குல்ல" என அவளை அனுப்பி வைத்தவர் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார். அவருக்குள் பலவித யோசனைகள். பவித்ராவிடம் எப்படி என்ன பேச வேண்டும் என்று முடிவு செய்தவர் அவளின் அறையை நோக்கி சென்றார்.

அங்கிருந்த கட்டிலில் ஓரத்தில் அமர்ந்திருந்த பவித்ராவின் அருகே சென்றார்.

"பவிம்மா..." என்ற அவரின் குரலில் கண்களில் வழிந்திருந்த நீரை துடைத்தவள் எழுந்து நிற்க முயல, அவளின் தோளை தொட்டு அமர்த்தியவர் அவளின் அருகே அமர்ந்தார்.

"பவி, உன்னை கட்டாயப்படுத்தறேன்னு நினைக்காத. வாழ்க்கையில எப்பவோ நடந்த ஒரு விபத்துக்காக நீ மீதி இருக்கும் உன் வாழ்க்கை முழுதையும் வீணாக்கக்கூடாதுனு தான் சொல்றேன். உன் வாழ்க்கை இதோட முடிஞ்சிட கூடாது. ஒரு பிரச்னையை பத்தியே யோசிச்சிட்டு இருந்தா அதுக்கான தீர்வு கிடைக்கவே கிடைக்காது. அதை விட்டு வெளியே வா. வெளிய பாரு. அப்போ தான் இந்த லைஃப் எவ்ளோ அழகானதுனு தெரியும். இவ்ளோ நாள் நீ எவ்ளோ மிஸ் பண்ணிருக்கேன்னு தெரியும்" லட்சுமி சொல்ல, "அம்மா உங்களை மரியாதை குறைவா பேசணும்னு சொல்லல. ஆனா வெளியே இருந்து பாக்கற உங்களுக்கெல்லாம் என் வேதனையும் வலியும் புரியாது. ப்ளீஸ் இதோட விட்ருங்க. சத்யாவும் நீங்களும் பண்ணுனதுக்கு நான் நிறைய கடமை பட்ருக்கேன். அதுக்கு நான் நன்றி உள்ளவளா இருக்கணும்னு நெனைக்கிறேன். அதனால தான் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்றேன். அவருடைய வாழ்க்கையும் நரகமாக வேண்டாம். ப்ளீஸ்..." பவித்ரா லக்ஷ்மியை பார்த்து கையெடுத்து கும்பிட்டாள் கண்களில் வழிந்த கண்ணீருடன்.

லக்ஷ்மிக்கு அவளை பார்க்க வேதனையாக இருந்தது. இந்த பெண் அவள் வந்தால் என் மகனின் வாழ்க்கை நாசமாகும் என நினைக்கிறாள். ஆனால் அவள் இல்லாமல் அவனின் வாழ்வு அழிந்து போகுமே அது ஏன் இவளுக்கு புரியவில்லை என்று எண்ணியவர் ஒரு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.