(Reading time: 8 - 15 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

" இல்லையே! ஏன் கேட்கறீங்க?"

" சுவாமிதான், எங்க குடும்பத்துக்கு வழிகாட்டி! கண்கண்ட தெய்வம்! அவர் போட்ட பிச்சைதான், இன்று நாங்க மூன்றுபேரும் உயிரோடிருப்பதும், தைரியமாக வாழ்வதும்!"

" அப்படியா!"

" ஐயா! இந்த காபியை குடிச்சிட்டு, குளிக்க ரெடியாயிடுங்க!" என்று மகள் காயத்ரி, சொல்லிச் சென்றாள்.

" ஐயா! காபி சரியா இருக்கா? இனிப்பு போதுமா?"

" நான் காபி குடித்து, பல வருஷமாயிடுத்து! சிறையிலே காபி தரமாட்டாங்க!"

" சாப்பாடு நல்லா இருந்ததா?"

சகாதேவன் சிரித்தார்.

" ஏன், ஏதாவது தப்பா கேட்டுவிட்டேனா?"

" பசி, ருசி, எல்லாம் மறக்கத்தான் சிறைதண்டனை! சரி, கடந்த காலத்தை மறந்து, இந்த வினாடியில் வாழ்வோமே!"

" சுவாமியும் இதையேதான் சொல்வார்! 'சென்றதை மற! வருவதைப் பற்றி கனவு காணாதே! எப்போதும், நிகழ்காலத்தில் இரு!' என்பார்!

"சரியா சொல்லியிருக்காரு!"

" நீங்க குளிச்சிட்டு வாங்க, சாப்பிடலாம்!"

சகாதேவன் கைப்பையிலிருந்த மாற்றுத் துணிகளை எடுத்துக்கொண்டு, குளியலறைக்குள் நுழைந்தார்.

" அம்மா! ஐயா அதிகம் பேசலையே, கவனிச்சியா?"

" காயத்ரி! பாவம்டீ, அவர்! ஒண்ணா, ரெண்டா, பதினெட்டு வருஷம்! சிறையிலே கடுங்காவல் தண்டனை! வெளியிலே வந்தா, பெற்றவங்களோ, கூடப் பிறந்தவங்களோ, ஒருத்தரும் வரவேற்கலே! முகத்தையே காட்டலே! மனசு வெதும்பிப் போய், கசந்திருக்கும்!"

" நானும் மாதவியும் பிறக்குமுன்பே, ஐயா சிறைக்குப் போயிட்டாரே, சொல்லும்மா! அவரை ஏன் சிறையில் அடைச்சாங்க?"

" எல்லாம் இந்தப் பாவியை காப்பாத்தினதாலேதான்!"

" விவரமா சொல்லும்மா!"

" அம்மா! நானும் வரேன், இரு!"

மாதவியும் சேர்ந்தவுடன், இருவருக்கும் தாய் கடந்ததை விவரித்தாள்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.