(Reading time: 8 - 15 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

" அப்போ எனக்கு பதினேழு வயசு! ஒருநாள் பிற்பகல் என் சிநேகிதி வீட்டுக்குப் போய்ட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.

ஒரு ரௌடி, என்னை வழிமறிச்சு, தன்கூட வரச்சொல்லி, கையைப் பிடிச்சு இழுத்தான்.

ரோடிலே நிறைய பேர் இருந்ததனாலே, நான் தைரியமா, என் கால் செருப்பை கழற்றி, அவன் தலையிலேயும் முகத்திலும் அடிச்சேன்......."

" கரெக்ட்! ராஸ்கல்! என்ன தைரியம் அவனுக்கு? நாலுபேர் நடுவிலே, கையை பிடிச்சு இழுக்க?"

" போதுமே, அந்த நாலுபேரோட லட்சணம்! கேளு! அந்த ரௌடிக்கு மூக்குக்கு மேலே கோபம் வந்திடுச்சி! அவ்வளவுதான்!

என் சேலை, ரவிக்கையை கிழிச்சு, என்னை நிர்வாணமாக்கி, கீழே தள்ளி, என்மேலே ஏறிட்டான்......"

" ஐயையோ! சுற்றியிருந்தவங்க, அவனை அடிச்சு நொறுக்கலையா?"

" த்தூ! வேடிக்கைப் பார்த்தாங்க, அந்த ரௌடியின் கையிலிருந்த அரிவாளை பார்த்துட்டு, பயந்து, பதுங்கிட்டாங்க! சிலபேரு 'அவனை செருப்பாலே அடிச்சா அவ திமிர் பிடிச்சு! இப்ப சிக்கிக்கிட்டா!'ன்னு வம்பு பேசினாங்க!"

" உன்னை காப்பாற்ற ஒருத்தருமே வரலையா?"

" அந்த ஒருத்தர் இவருதான்! அந்த ரௌடியின் கையிலிருந்த அரிவாளைப் பிடுங்கி, அவனை கீழே தள்ளி, மிதித்து, துண்டு துண்டா வெட்டிட்டாரு, அது மட்டுமா?

அந்த ரௌடியின் தலையை ரத்தம் சொட்டச் சொட்ட, தன் கையிலே எடுத்துக்கிட்டு, நேரே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய், சரண் அடைஞ்சுட்டார்........"

" சபாஷ்! இவர்தான் ஆம்பளை! வீரப் பதக்கம் கொடுத்திருப்பாங்களே, கவர்ன்மெண்ட்!"

"கிழிச்சாங்க! இவர் பேரிலே, பழியைப் போட்டு, வழக்கு போட்டு, பதினெட்டு வருஷம் கடுங்காவல் தண்டனை வாங்கித் தந்தாங்க!"

" அயோக்கியத்தனமா இருக்கே?"

" அந்தப் பழியை என்மேலே போட்டுட்டாங்க!"

" அதெப்படி?"

" உண்மையை, நடந்தபடியே கோர்ட்டிலே சொன்னா, என்னை கேவலப்படுத்தறாமாதிரி, எதிர்க்கட்சி வக்கீல், கேள்வி கேட்பான், அதை பேப்பரிலே போட்டுடுவாங்க, எல்லாருக்கும் தெரிஞ்சுபோய், என்னை யாரும் கட்டிக்க மாட்டாங்கன்னு ஏதேதோ சொல்லி,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.