தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 32 - சாகம்பரி குமார்
அதிரதனும் வைத்தியரும் வீட்டை விட்டு கிளம்பியதும் நேராக கங்காதரனிடம் அழைத்து சென்றான். அப்பாவிடம் விஷயத்தை விளக்கினான். வைத்தியரிடம்,
"ஐயா நீங்கள் இங்கேயே இருங்கள். எனக்கு வேறு வேலை இருக்கிறது. நாம் இருவரும் ஒன்றாக இருப்பதும் தவறுதான். ஒரு வேளை நீங்கள் சந்தேகப்படுவது போல் யாராவது நம்மை பின்தொடர்ந்தால் இப்பொழுது பிரச்சினையாகி விடும். எனவே நீங்கள் இங்கேயே இருங்கள்" என்று சொன்னான்.
பிறகு அவன் அபியின் மரபணுவில் ஏற்பட்ட மாற்றத்தை உறுதி செய்வதற்கு அதிதியின் மரபணுவுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதற்காக அவனுடைய ஆய்வகத்திற்கு சென்றான். அங்கு இருவருடைய டி என் ஏ வரிசை தொடரையும் ஒப்பிட்டு பார்த்தால் எங்கு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
அவன் ஆய்வகத்துக்கு சென்று தன்னுடைய வேலையை செய்துகொண்டே வீட்டிற்கும் தொடர்பு கொண்டான். கிருபா அங்கிளிடம் பேசி நிலைமையை தெரிந்து கொண்டான். ஒரு பிரச்சினையும் ஏற்படவில்லை என்பதை புரிந்து கொள்ளவும் அவனுடைய வேலையை அமைதியாக பார்த்தான்.
இரண்டாவது நாளிலேயே அபியின் உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திய ம்யூட்டேஷன் ஆன டிஎன்ஏ வரிசையை கண்டுபிடித்து விட்டான். அதை சரி செய்வதற்கும் திட்டமிட்டு விட்டான். அது பழைய முறையாக இருந்தாலும் சில விஷயம் தொடர்வது நல்லது என்று நினைத்தான்.
அபியின் ஜீன் வரிசைத் தொடரில் சில விஷயங்களை சேர்க்க வேண்டும். அதற்கு வைரஸ் மூலம் ஜீன் மாற்றம் செய்யும் முறையையே பயன்படுத்தலாம். அதேபோல தேவையில்லாததை செயல்படாத நிலையில் வைக்கவும் திட்டமிட்டு விட்டான்.
இந்த வேலையிலேயே அவனுடைய முழு கவனமும் இருந்ததால் ஒரு நாள் முழுவதும் மற்றவர்களை அவன் தொடர்பு கொள்ள முடியாமல் போய்விட்டது
அதே போல அவனை கண்காணிக்கும் நபர் ஒருவர் அந்த ஆய்வகத்திலேயே