(Reading time: 14 - 27 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

யல்லால்-காளி! பிறிது நானும் உண்டோ? அப்படின்னு சொன்னார்."

"இன்னும் எனக்கு தெளிவாகவில்லைஆனால் நீ சொன்ன காளிங்கற வார்த்தை எனக்கு பிடிச்சிருக்குசூலம் கொண்டு அரக்கனை படுகளம் செய்யும் பதினென் கரம் கொண்ட காளி... "

"ஹும்நீ அப்படித்தான் இருக்கிறாய்"

"ஆமாம்பயமாயிருக்கா?"  என்று கண்களை உருட்டினாள். இருளில் இரண்டு கண்ணாடி கோலி குண்டுகள் ஒளிர்வதுபோல இருந்தது. அப்போது அங்கு வந்த அதிதி,

"என்ன பேசிட்டு இருக்கீங்க" என்றாள்.

வினய் அனைத்தையும் விளக்கினான்.

"அம்மா தாயே இவ்வளவு. கோபம் வேண்டாம்னு சொன்னால்நான்தான் காளிங்கறாங்க.. கண்ணை உருட்டி மிரட்டல் விடறாங்க"

"ஆவ்அக்காநீங்கள் அப்படி நினைத்து பார்க்ககூட கூடாது. தப்பு பண்ணவனை தெய்வம் தண்டிச்சிடும். அவன் இந்நேரம் செத்துகூட போயிருப்பான். நீங்க அமைதியாக இருங்க"

"இல்லை அதிம்மாஅவனை எப்படியாவது தேடி பிடிப்பேன். ஒருவேளை அவன் செத்து போயிருந்தால்கூட எப்படி செத்தான்னு தெரிஞ்சுக்குவேன். அந்த மரணமாவது அவனுக்கு தண்டனையா கிடைச்சுதான்னு தெரிஞ்சால்தான் சத்தியம் தர்மத்துஸமேல நம்பிக்கை வரும். மனசு அமைதியாகும்"

"அவனை எங்க போய் தேடுவாய்?"

"அத்தான் வேலை பார்க்கற ஆய்வகத்துல இருந்துதான் தொடங்கணும்வினய் நீ எனக்கு உதவி செய்வேதான" அபி கேட்க, அவன் பதில் சொல்ல விழையும் முன்

"கண்டிப்பா செய்வே.. உன் தேஜுவுக்காக செய்வாய்" என்று அவளே முடித்தாள்.

அவள் தேஜு என்று அவளையே சொல்லிக் கொண்டாளா… இல்லை.. தேஜுவைபோல பாதிக்கப்பட்டவள் அதனால் உதவி செய்வான் என்று சொல்கிறாளா என்று புரியவில்லை. ஆனாலும்,

"உனக்காகவே செய்வேன் அபி' என்று மென்மையாக உறுதியாக சொன்னான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.