தொடர்புடையதுதான். ஏனெனில் ஆய்வகத்தில் இருந்து எனக்கு கிடைத்த தகவல் படி அவன் ம்யூட்டேஷன் செய்வது பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டு இருப்பதாக சொன்னார்கள். எனவே எனக்கு உறுதியாகத் தெரிகிறது. அந்த வைத்தியர் வேறு எங்கேயோ இருந்து அதிரதனுடைய பரிசோதனையை செய்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் அங்கிருந்து கிடைக்கும் டிஎன்ஏ வரிசை மாற்றத்தை இவன் ஆய்வகத்தில் வைத்து உறுதிப்படுத்திக் கொண்டு இருக்கிறான் என்று தெரிகிறது"
"நீங்கள் சொல்றது உண்மையாக இருந்தால் சீக்கிரம் அதுக்கு ஒரு முடிவை நாம கண்டுபிடிக்கணும்" என்று பல குரல்கள் எழும்பின.
"அவனை அப்படியே விட்டு விட்டால் நம்முடைய தொழில்கள் பாதிக்கும். நாம கோடிக்கணக்கில் இன்வெஸ்ட் பண்ணிட்டு இருக்கோம். இந்த மாதிரி எளிதான மருத்துவ சிகிச்சை எல்லாம் நாம அனுமதிக்கவே கூடாது. அவனை அழிச்சே ஆகணும்" என்றும் கொக்கரித்தனர்.
"அதற்கான ஏற்பாட்டை நான் செய்துவிட்டேன். இன்னும் சற்று நேரத்தில் எனக்கு அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவரும். நானே நேரில் சென்று அத்தனையையும் அழித்தொழித்து விடுகிறேன். இத்தனை வருடங்களாக நாம் இணைந்திருக்கிறோம். இனியும் இணைந்திருப்போம்."
மூன்றாம் நாள் அபியின் கட்டு பிரித்து மாற்றப்பட்டது. இனி அவள் தலையை நீருக்குள் மூழ்க வைக்க தேவையில்லை. கழுத்து வரை இருந்தால் போதும். அதற்கான ஏற்பாட்டை வினய் செய்யும்போது அனிச்சை செயலாக அபி கையை உதற…
அவ்… இந்த முறையும் அவன் காற்றில் பறந்தான். அவனை ஓடிப்போய் தூக்கிய அதிதி…
"உங்களுக்கு சத்து மாத்திரை நிறைய தரணும்" என்றாள்.
"அதைவிட உன்னோட பயில்வான் சகோதரிக்கு சத்து குறைக்க மாத்திரை கொடும்மா"
"பயில்வானா…" அதிதி சிரித்தாள்.
"வாம்மா போய் விட்ட வேலையை முடிப்போம்" என்று அபியை நோக்கி சென்றான். அவளுடைய கைகளில் சென்சார் ப்ரோப்களை இணைக்கும் போது…