என்னை செய்ய அனுமதித்து விட்டார்.. நான் இன்னும் சற்று பொறுத்து அவரையும் அழித்து விட்டு வந்துவிடுகிறேன். ஏனெனில் இந்த ஆராய்ச்சியை அவர் மீண்டும் தொடரக்கூடாது என்று சொல்லிக்கொண்டிருந்தான்."
"அப்படியென்றால் நீ சொல்வதை வைத்துப் பார்த்தால் ஷர்மா சார் செய்த ஆராய்ச்சி வெற்றிகரமானதுதான். ஆனால் அவர் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று யாரோ ஜேக்கை அனுப்பி அவருடன் அசிஸ்டன்ட் போல வேலை செய்ய வைத்திருக்கிறார். அவனை கொண்டே அந்த ஆராய்ச்சி அழித்திருக்கிறார்கள் சரிதானே… எவ்வளவு பெரிய துரோகம்!" என்றவன் தொடர்ந்து...
"யார் இதைச் செய்திருப்பார்கள்?. அவர்களுக்கு இதனால் என்ன லாபம் கிடைத்திருக்கும் என்று யோசிக்க வேண்டும்" என்றான்.
" எனக்கு அதுவும் தெரிந்துவிட்டது. அவன் பேசும் பொழுது ஒரு வார்த்தை கூறினான்... இவர் ஒரு வேளை இந்த புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிப்பதில் வெற்றி அடைந்துவிட்டால் நாம் நம்முடைய கம்பெனியை இந்தியாவில் இழுத்து மூடிவிட்டு போகவேண்டியதுதான். நம்முடைய மருந்துகள் எதுவும் இங்கே விற்பனையாகாது. எனவே நாம் இந்த மாதிரி முயற்சிகளை தடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும் என்றான்"
"அப்படி என்றால் இது யாரோ வெளிநாட்டு மருந்து கம்பெனி செய்கின்ற வேலை அப்படித்தானே.. எனக்கு ஒரு சந்தேகம் இதே சிக்கல் என்னுடைய பாஸ் இருக்கும் நடந்தது அவர் புற்று நோய்க்கு மருத்துவம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அவர் ஒரு உதவியாளர் ஜெனிட்டாவை கொலை செய்துவிட்டனர். அந்த ஆராய்ச்சி மட்டும் தொடர்ந்து நடந்து இருந்தால் அவர் இந்நேரம் புற்றுநோய்க்கு மாற்று மருத்துவத்தை இணைத்து சிகிச்சை முறையை கண்டு பிடித்திருப்பார். இது நீண்ட நாட்களாக நம் மீது கட்டாயமாக நடத்தப்பட்டு வரும் மறைமுகமான வியாபார முறை என்று எனக்குத் தோன்றுகிறது" என்றான்
"எனக்கு அது பற்றியெல்லாம் தெரியாது. ஆனால் என் வாழ்க்கையில் லட்சியமே அந்த ஜேக்கை கண்டு பிடித்து அவனை அழித்து விட வேண்டும்