(Reading time: 14 - 27 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

"சாரி…" என்ற குரல் கேட்டது.

" தூக்கி வீசியடிச்சிட்டு இப்ப எதுக்கு சாரி கேட்கற" இயல்பாக வினய் கேட்டான்.

கேட்டபின் திடுக்கிட்டு அதிதியை பார்த்தான்.

"வாட்ஸ் ஹாப்பனிங்…" கத்தினான். அதற்குள் அபியின் அருகில் மண்டியிட்டு அமர்ந்த அதிதி,

'அபிக்காநீங்க பேசறீங்களா!" ஆச்சரியமாக வினவினாள்.

"அடஅதிம்மா என்னால சத்தமா பேச முடியுது. இத்தனை நாள் மனசுக்குள்ள பேசிட்டு இருந்தேன்என்னுடைய குரல் எனக்கு கேட்குது" அபி மகிழ்ச்சியாக பேசினாள்.

அவளுடைய குரலில் மகிழ்ச்சி தெரிந்தாலும் ஆர்பாட்டம் இல்லை. மெதுவாக அழகாக வார்த்தைகளை கூர்மையுடன் பேசினாள். புதிதாக வார்த்தைகளை உச்சரிக்க கற்றுக் கொள்ளும் குழந்தையின் பேச்சு போல அது இருந்தது. அதை கேட்ட அதிதி ஆர்வமாக அபியை கட்டி பிடித்து கொண்டு கண்ணீர் சிந்தினாள். வினய் உடனே ஓடிப்போய் க்ருபா அங்கிளை அழைத்து வந்தான்.

 "இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று பாருங்கள்" என்று சுட்டிக்காட்டினான்.

" கிருபா மாமா நீங்கள் எனக்கு செய்த அத்தனை உதவிக்கும் நன்றி" என்று அபி பேசவும்,

 க்ருபாவிற்கு பேச்சு மூச்சு இல்லை. சிறு வயதில் கேட்ட அபியின் குரல் இப்போது கேட்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு

" நீண்ட நாட்கள் கழித்து என்னுடைய வாழ்க்கையில் ஒரு சந்தோஷமான விஷயம் நடந்திருக்கிறது. ரொம்ப நன்றி வினய்ரொம்ப நன்றி அதிதி..  ரொம்ப நன்றி அபி" என்று கண்ணீர் மல்க பேசினார்.

"எனக்கு ஏன் சார் நன்றி எல்லாம் சொல்றீங்க. இன்னும் நீங்க இத்தனை வருஷமா பட்ட கஷ்டத்துக்கு பலன்கள் இன்னும் உங்களுக்கு கிடைக்க போகுது. இது ஆரம்பம்தான்...  பாஸ் செய்த ட்ரீட்மென்ட் இப்பொழுது ஒரு வேலை செய்கிறது" வினய் சொன்னான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.