(Reading time: 14 - 27 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

இருப்பதையும் அறியாமல் போய்விட்டான். அவன் என்ன விதமான வேலைகளை செய்து கொண்டிருக்கிறான் என்பதை தெரிந்து கொண்டு அதனை தெரிவிக்க வேண்டிய தெரிவித்து விட்டார்.

ஜெனிட்டாவை அழித்த அந்த கும்பலுக்கு இந்த விஷயம் தெரிந்து விட்டது. அவள் விட்டதை இவன் தொடர்கிறான் என்பதையும் புரிந்து கொண்டார்கள்உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று வேகமானார்கள்.

அவர்கள் ஒரு விஷயத்தை தவறாக புரிந்து கொண்டனர். புற்றுநோய்க்கான மாற்று மருந்தை மரபணு மாற்றம் கொண்டுவர முடிவதை…  மூலிகை மருந்தை வைத்து செய்ய முடியும் என்று நிருபிக்க அதிரதன் முயற்சி செய்கிறான் என்று எண்ணினார்கள். உடனடியாக கூட்டம் கூட்டினர். அதில் ஒருவன் பேச ஆரம்பித்தான்.

"நாம சந்தேகப்பட்டது சரிதான். அவன் இன்னும் தன்னுடைய ஆராய்ச்சியை நிறுத்தவில்லைஇடையில்  ஒரு மூன்று நாள் எங்கே இருந்தான் என்றும் தெரியவில்லை. இத்தனைக்கும் காரணமான அந்த வைத்தியன் ஆளே காணவில்லைஇவன் இங்கே வந்து அந்த டிஎன்ஏவை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கான். இவனை இதோட விடக்கூடாது. தொடர்ந்து போயி அவன் என்ன ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கானோ அதை எல்லாத்தையும் அழிச்சுடணும் "

அதன் பிறகு அந்த மாபியா கும்பல் தலைவன் பேசினான். "நீங்கள் சொல்வது உண்மை..  இங்கு நம் குழுவை சேர்ந்த  அனைத்து மருத்துவ வியாபாரிகளும் உள்ளனர். அனைவரும் கோடிக்கணக்கான தொகையை மூலதனமாக்கி உள்ளனர்நம்முடைய  ஒரே நோக்கம் மாற்று மருத்துவ சிகிச்சை எதையும் வெற்றி பெற வைத்து விடக்கூடாது என்பதே.. என்னுடைய சோர்ஸ்கள் மூலம் எனக்கு சில உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த அதிரதன் இன்னும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நாம் ஜெனிட்டாவை அழித்த பிறகு கொஞ்சம் தயங்கி இருக்கிறான். ஆனால் திரும்பவும் தன்னுடைய ஆராய்ச்சியை தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கிறான். அவளுடைய  தாத்தாவான பரம்பரை வைத்தியர் உடன் சேர்ந்து கொண்டு இப்பொழுதும் ஒரு ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறான். இதுவும் அனேகமாக புற்றுநோய்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.