(Reading time: 14 - 27 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

என்பதே."

"ஒரு ஜேக்கை மட்டுமே கொலை செய்து விட்டால் இந்த சிக்கல் தீர்ந்து விடுமா"

 " இல்லை ஆனால் அவனை உயிருடன் விட்டால் இது போன்ற பல இழப்புகள் நடக்கக்கூடும். இப்பொழுது நீயே சொன்னாய் அல்லவா ஒரு உயிர்கூட பறி போயிருக்கிறது. இதையெல்லாம் நம்மால் தடுக்க முடியாது ஆனால் நமக்கு கண்ணுக்குத் தெரிந்த எதிரியை அழிப்பது தவறில்லை" அபி தீர்மானமாக சொன்னாள்.

அதை பார்த்த வினய்க்கு கவலையாகியது. அபியை குணப்படுத்தி நல்ல வாழ்க்கை வாழ வைக்க இத்தனை பேர் முயற்சிக்கும் போது அவள் இப்படி நினைப்பது தவறல்லவா?

"என்ன யோசனை வினய்?" அபி கேட்க, அவன் மனதில் இருப்தை சொல்ல வேண்டாம் என்று நினைத்து பொதுவாக பேசினான்.

"ஒன்றுமில்லை அபிஇந்த உலகம் சந்தர்ப்பவாதிகளுக்கு சாதகமாகத்தான் சுற்றி கொண்டு இருக்கிறது என்று தோன்றியது"

"நீயும் இப்படிப்பட்டவர்களால் பாதிக்கப்பட்டவனா?"

"இல்லைஆனால் என்னுடைய தோழி பாதிக்கப்பட்டாள்."

"உன்னால அதை தடுக்க முடியவில்லையா?"

"இல்லை…" என்றவன் தேஜுவை பற்றி சொன்னான்.

"பாவம்பாதேஜு போன்ற குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. பெண் குழந்தைகள்பாடு இந்த உலகம் முழுமைக்கும் பரிதாபமாகவே இருக்கிறதுதிடீர்னு கடவுளுக்கு கோபம் வந்து பெண் குழந்தைகளே பிறக்கக் கூடாது என்று சபிச்சுட்டார்னா நல்லா இருக்கும்"

"பெண் இல்லாத உலகம் ம்யூசியம்போல ஆயிடும்ஐ மீன் செத்து போயிடும். யாதுமாகி நின்றாய் காளி"

"அப்படி என்றால்?"

"பாரதின்னு ஒருத்தர்மகாகவி.."

"தெரியும். சில கவிதை மட்டும் படிச்சேன். அவர் சொன்னாரா…?"

"ஆமாம்பெண் சக்தி ரூபம்னு சொன்னார்.ஒவ்வொரு உயிருக்குள்ளும் சக்தியாக நிற்பது பெண்தான். என்னுள்ளே புகுந்தாய்  பின்பு நின்னை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.