இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள கங்காதர்க்கு உடனே அலைபேசியில் அழைப்பு விடுத்தார். அந்த விஷயமும் கொஞ்சம் சிக்கலானது. ஏனெனில் அவருடைய அலைபேசிக்கு வரும் அழைப்புகள் டேப் செய்ய ஏற்பாடாகி இருந்தது.
அபியால் பேச முடிந்ததால் அந்த இடம் கொஞ்சம் கலகலப்பானது. நீருக்குள் மூழ்கவில்லை என்பதால் அவளால் மூச்சுவிட முடிந்தது. அவளுக்கு பொழுது போக வேண்டிய சூழலில் அதிதியும் வினயும் மாற்றி மாற்றி புத்தகங்களை வாசித்து காட்டி விவாதிக்க ஆரம்பித்தனர்.
தனியாக இருந்த ஒரு சமயத்தில் வினய் அவளிடம் பேச ஆரம்பித்தான்.
"அப்படி யார் மீது உனக்கு கோபம் அபி"
"எனக்குள் கோபம் உள்ளது என்று உன்னிடம் சொன்னேனா?"
"நேரடியாக சொல்லவில்லை… உன்னுடைய கவிதை அதை காட்டி கொடுத்து விட்டது"
"ஓ…"
"இப்போது உன்னுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. எவ்ரிதிங் வில் பீ ஆல்ரைட்… நீ நர்மலான வாழ்க்கையை வாழ பழகுவது நல்லது"
"என்னை சுற்றி நடந்த அனைத்தும் அசாதாரணமாக இருக்கும்போது நான் எப்படி நார்மலாக இருக்க முடியும்?"
"ஓகே.. உன்னுடைய நல்லது நினைக்கும் எங்களுக்காக…"
"கோபத்தை விட வேண்டுமா…"
"ப்ச்.. கேயாஸ் தியரி மாதிரி உன் வாழ்க்கை சம்பந்தமே இல்லாமல் பாதிக்கப்பட்டது. வெல்… க்ருபா சார் மீது தவறில்லை… சந்தேகப்பட்ட உன் அப்பாவும் உயிருடன் இல்லை.. உங்கம்மா மீது இருந்த கறையை பாஸ் துடைத்து விட்டார்… உன்னை அம்மாவாகவே நினைக்கிற தங்கை… தொலைஞ்சுபோன உன்னோட வாழ்க்கையை முழுவதுமாக தேடித் தர நாங்கள் முயற்சி செய்துட்டு இருக்கோம்… எதுக்கு இன்னும் கோபம்?"
"நீ ஒருத்தனை மறந்துட்ட"
"யாரை?"