(Reading time: 18 - 36 minutes)
Priyamaanavale
Priyamaanavale

இப்போ அவங்களுக்கு கால் பண்ணி நீங்களும் பரத்தும் அங்க வரதை கன்பார்ம் பண்ணுங்க. அவங்க உங்க கால்க்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க" சொன்னவனை சந்தோசத்துடன் பார்த்தவர் "அப்போ நீ வரலையா ராம்" என கேட்க, "இல்லை பாட்டி, நீங்க கால் பண்ணுனதும் என்னவோ ஏதோனு ஓடி வந்துட்டேன். முக்கியமான மீட்டிங்ஸ் இருக்கு. நான் இன்னொரு நாள் அங்க போயிக்கிறேன். நீங்க போயி பேசிட்டு வாங்க" என்று விட்டு அலுவலகம் கிளம்பினான்.

வீடே பரபரப்பாக இருந்தது. கலைவாணி வீட்டை ஒழுங்கு படுத்தி பலம், இனிப்பு வகைகள், காரம் எல்லாம் தயாராக்க, இலக்கியா பட்டு புடவையில் முழு அலங்காரத்துடன் தயாராகி கொண்டிருக்க, காவ்யா வீட்டில் திடீரென உண்டான விழாக்கோலத்தில் சந்தோசத்துடன் இருந்தனர். எல்லாவற்றையும் எடுத்து வைத்தபடி அவ்வப்போது வாசலை பார்த்து கொண்டிருந்த தமிழ்செல்விக்கு பாட்டி சொன்ன ஒரு விஷயம் மனதிற்குள் ஓடி கொண்டிருந்தது.

"செல்வி ஈவினிங் ஒரு அஞ்சு மணிக்கு நானும் பரத்தும் வரோம். எல்லாம் நல்லபடியா நடக்கும். கவலை படாத. இன்னொரு போனஸ் கூட இருக்கு. நீ நிச்சயம் மறுக்கக்கூடாது. இது பாட்டியுடைய ரெக்வஸ்ட்" என சொல்லியிருந்தார் விசாலம். அந்த "இன்னொரு போனஸ்" தான் அவள் மண்டையை குடைந்து கொண்டிருந்தது.

அவள் யோசனைக்கு நடுவே அவளின் செல்பேசி அழைக்க அதை எடுத்தவளுக்கு அசோக் அவளை அழைக்கவும் ஆச்சர்யமாக இருந்தது. இதுநாள் வரை அவளை அவன் செல்பேசியில் அழைத்தது இல்லை.

அந்த அழைப்பை ஏற்றவள் "ஹலோ அசோக்" எனவும், "தமிழ், நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். இன்னைக்கு ஈவினிங் ஒரு சிக்ஸ் தேர்ட்டிக்கு மீட் பண்ண முடியுமா? நீ கொஞ்சம் பாட்டிகிட்ட சீக்கிரம் கிளம்பரதா சொல்லிட்டு பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கற காபி ஷாப்க்கு வரமுடியுமா...ப்ளீஸ்" அவன் மூச்சை பிடித்து கொண்டு ஒரு வழியாக சொல்லிவிட்டு அவளின் பதிலுக்காக காத்திருந்தான்.

"அசோக்...அ...அது இன்னைக்கு ஒரு முக்கியமான வேலையா நான் லீவ் போட்ருக்கேன். ஏதாவது ரொம்ப முக்கியமான விஷயமா? போன்ல சொல்றதுன்னா சொல்லுங்க...இல்லை நேர்ல சொல்லனும்னா நாளைக்கு தான் முடியும்" எதுவும் முடிவாகாமல் அவனிடம் சொல்ல வேண்டாம் என எண்ணி தமிழ் இப்படி சொல்ல, மறுமுனையில் அசோக்கிற்கு ஏமாற்றம் ஆகிப்போனது. துவக்கமே தடங்கலாக இருக்கிறதே என.

"அஷோகே இருக்கீங்களா?" அவனின் அமைதியில் தமிழ் கேட்க, "ஹான் நேர்ல பேசலாம்னு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.