(Reading time: 18 - 36 minutes)
Priyamaanavale
Priyamaanavale

பாட்டி ஒரு முக்கியமான மற்றும் அவசரமான விஷயம் என அழைக்கவும் என்னவோ ஏதோ என பதறி ஓடி வந்த ராம்க்கு பாட்டி விஷயத்தை சொன்னதும் முதலில் கோவம் வந்தது. அங்கு நின்று கொண்டிருந்த பரத்தை பார்த்தவனுக்கு அவன் முகத்தில் இருந்த பயமும் பதற்றமும் ராம் என்ன சொல்வானோ என இருந்த எதிர்பார்ப்பையும் அவனின் கோபத்தை குறைத்தது. சிறிது நேரம் அமைதியாக இருந்தவனை பார்த்த விசாலம்

"ராம், இதுல யோசிக்க இனி எதுவுமே இல்லை. அவ தான் இந்த வீட்டு மருமக. ஆனா???" ஏதோ சொல்லவந்தவர் தயங்க, "என்னாச்சு பாட்டி???" என்றான் ராம் கேள்வியாக.

"நீ அவனுக்கு அண்ணன். உனக்கு கல்யாணம் பண்ணாம அவனுக்கு, அதுவும் அவன் படிப்பை முடிக்கிறதுக்குள்ள பண்ணுனா எல்லாரும் அவங்கவங்க இஷ்டத்துக்கு கதை சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க. உனக்கு எதோ பிரச்சனை அதனால தான் உன்னை விட்டுட்டு அவனுக்கு பண்றோம்னு...அட்லீஸ்ட் உங்க ரெண்டு பேருக்கும் ஒரே மேடைல கல்யாணம் பண்ணுனா கூட அந்த மாதிரி பேச்செல்லாம் வராது. ஆனா இப்போ நமக்கு நேரம் குறைவா இருக்கு. அந்த பொண்ணு பிரேக்னன்ட்டா இருக்கா. எவ்ளோ சீக்கிரம் முஹூர்த்தம் கிடைக்குதோ அதுல பண்ணனும்...அதான்...." மீண்டும் ஏதோ சொல்லவந்த தயங்கினார் விசாலம்.

அவரை ஒருமுறை பார்த்த ராம், சிலநொடிகள் யோசனைக்கு பின் பரத்தை பார்த்தவன் பாட்டியிடம் திரும்பினான்.

 "பாட்டி நீங்களும் பரத்தும் இன்னைக்கு அவங்க வீட்டுக்கு போங்க" என சொல்லவும் பரத் ஓடி வந்து அவனை கட்டி கொண்டான்.

"அண்ணா தேங்க்ஸ்ணா. நீ என்ன சொல்லுவியோன்னு பயந்துட்டே இருந்தேன். ரொம்ப தேங்க்ஸ்" என்றவனை விலக்கி நிறுத்தியவன் "சரி சரி போயி உன் வருங்கால வைப் கிட்ட விஷயத்தை நீயே சொல்லு அப்போ தான் ஹாப்பி அவங்க" என அவனை அனுப்பியவனை பார்த்தார் விசாலம்.

"சொல்லு ராம்...என்ன பேசணும்? " என கேட்க, அவரை ஒரு புன்னகையுடன் பார்த்தான் ராம்.

"ஏதோ தனியா பேசணும்னு தான அவனை அனுப்புன??" விசாலம் சொல்ல, "ஆம்" என தலையசைத்தவன் அதனை தொடர்ந்து பேசிய வார்த்தைகளில் விசாலம் முகம் ஆச்சர்யம், அதிசயம், சந்தோஷம் என மாறி மாறி பிரகாசித்தது.

ராம் பேசி முடித்துவிட்டு அவரை பார்க்க, "ஐயோ என் தங்கம்டா நீ. எப்படி என் மனசுல நினைச்சதை அப்படியே சொல்ற?? ஐயோ...எனக்கு சந்தோஷத்துல என்ன சொல்றதுன்னே தெரியல..."என சந்தோசத்தில் திணறியவரை அமைதிபடுத்தியவன் "பாட்டி ரிலாக்ஸ்...நீங்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.