(Reading time: 18 - 36 minutes)
Priyamaanavale
Priyamaanavale

இத்தனை நேரம் தயார் செய்ததெல்லாம் மறந்து போனது.

"செல்வி....என்னாச்சு? நான் ஒரு கேள்வி கேட்டா அதுக்கு பதில் சொல்லாம ஜூஸ் குடிச்சீங்களானு கேக்கற? நேத்து அம்மா சீக்கிரம் வர சொன்னாங்கனு போனியே...அதாவது பிரச்சனையா?" விசாலம் "மீண்டும் கேட்கவும் ஆமாம்" என தலையசைத்தாள் செல்வி.

"என்னாச்சு??? என்ன பிரச்சனை???  என்னால ஏதாவது செய்ய முடிஞ்சா செய்றேன்" விசாலம் சொல்லி முடிக்கவும் "பாட்டி உங்களால மட்டும் தான் எனக்கு உதவ முடியும்" என அவரின் இரு கைகளையும் கூப்பி பிடித்தவள் சொல்ல, கண்கள் கலங்க தன முன்னே கைகூப்பி நின்ற தமிழ்செல்வியை கண்டு பதறி போனார் விசாலம்.

"ஐயோ செல்வி, என்னாச்சு??? யாருக்காவது உடம்பு முடியலையா?? என்னாச்சும்மா?" அவர் அமர்ந்திருந்த கட்டிலில் இருந்து எழுந்து அவள் அருகே வந்து கூப்பி இருந்த கையை கீழே இறக்கி விட்டவர் அவளை ஆதரவாக அணைத்தபடி கேட்க, "இலக்கியா ப்ரெக்னன்டா இருக்கா..."அதை சொல்லி முடிக்கும் முன் தமிழ்செல்வியின் உடல் கூச்சத்தால் நடுங்கியதை உணர்ந்தார் விசாலம்.

"ஐயோ கடவுளே...."அதிர்ச்சியில் அவர் கை அவரறியாமல் அவர் வாயடைத்தது. சில நொடி அமைதியாக இருந்தவர் "எ...எப்படி...???" எனவும் "காலேஜ்ல அவ சீனியரும் அவரும் லவ் பன்றாங்க" ஒவ்வொரு வார்த்தையும் அவமானத்தால் கூச்சத்தாலும் நடுங்கி வெளியே வந்தது தமிழ்செல்விக்கு. 

"ஓ...." விசாலம் யோசனையுடன் நிற்க, "அவங்க ரொம்ப பெரிய குடும்பம்..." தமிழ்செல்வி சொல்லவும், "நான் அவங்க கிட்ட பேசணுமா? சொல்லு செல்வி, நான் வேணா ராமை உன்கூட அனுப்பவா அவங்க கூட பேச?" விசாலம் கேட்க, "பரத் இலக்கியாவுடைய காலேஜில தான் படிக்கிறாரு" என்றாள் தமிழ்செல்வி.

"ஓ...அப்படியா. அப்போ அவனுக்கு அந்த பையனை கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். இரு அவன் ட்ரிப் போயிட்டு விடியகாலைல தான் வந்தான். தூங்கிட்டு இருக்கான். அவனை கூப்டு கேட்போம்" என்றவர் பாரத்தை அழைக்க முனையவும் சட்டென ஏதோ விளங்க அதிர்ச்சியுடன் தமிழ்செல்வியை பார்த்தார்.

தமிழ்செவி அவரை பார்த்த பார்வையில் அவருக்கு எல்லாம் விளங்க, அந்த கட்டிலில் பொத்தென அமர்ந்தார் விசாலம். இந்த விஷயத்தை ஜீரணிக்கவே அவருக்கு சில நிமிடங்கள் பிடித்தது.

"பரத்...."அவரின் குரல் அந்த வீடு முழுதும் எதிரொலிக்க, இரண்டு நிமிடங்களில் கீழே ஓடி வந்தான் பரத்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.