(Reading time: 18 - 36 minutes)
Priyamaanavale
Priyamaanavale

நெனைச்சேன். இப்போ நீ ஒரு தெண் மினிட்ஸ் பிரீயா??" அசோக் கேட்கவும் வீட்டு வாசலில் கார் வந்து நிற்கவும் சரியாக இருக்க, "அசோக் நான் அப்பறம் கால் பண்றேன்" என்று அழைப்பை துண்டித்தவள் வாசலை நோக்கி ஓடினாள்.

கலைவாணியும் தமிழ்செல்வியும் இருவரையும் வரவேற்று வீட்டிற்குள் அழைத்து சென்றனர்.

சின்ன வீடு என்ற இழப்பமோ அசவுகரியமோ இல்லாமல் வந்து அமர்ந்த விசாலம் "வணக்கம் மா, செல்வி உங்களை பத்தி நிறைய பேசிருக்கா. உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்" சொல்ல, கலைவாணி மகிழ்ந்து போனார். தமிழ்செல்வி சொன்னது போல இவர் உண்மையிலேயே ஏழை பணக்கார வித்தியாசம் எல்லாம் பார்ப்பது இல்லை என புரிந்தது.

"இவன் தான் என் ரெண்டாவது பேரன் பரத்" என அவனை அவர் அறிமுக படுத்த பரத் சற்றே கூச்சத்துடன் அவருக்கு வணக்கம் சொன்னான். பொதுவாக சில நிமிடங்கள் பேசியவர்கள், "செல்வி, உன் தங்கையை கூட்டிட்டு வா...நான் பார்த்து இல்லையே?" என விசாலம் பாட்டி சொல்லவும் தமிழ் இலக்கியா இருந்த அறைக்குள் சென்றவள், அவளையும் அழைத்து கொண்டு வெளியே வந்தாள்.

இலக்கியாவை அழைத்து தன்னருகே அமர்த்திய விசாலம், அவளை பற்றியம் அவள் படிப்பு விவரங்களையும் கேட்டு கொண்டவர் பின்னை கலைவாணியிடம் திரும்பினார்.

"பரத் எனக்கு ரெண்டாவது பேரன். முதல் பேரன் ராம். இப்போ நமக்கு நேரம் இல்லை. உடனே கல்யாணத்தை முடிவு செய்தாக வேண்டி இருக்கு. ஆனா முதல் பையனுக்கு கல்யாணம் பண்ணாம ரெண்டாவது பேரனுக்கு பண்ணுனா நாலு பெரு நாலு விதமா பேசுவாங்க. எங்க பேரனுக்கு மட்டும் இல்லை, உங்களுக்கும் அதே மாதிரி தான. தமிழ் இருக்கும் போது ரெண்டாவது பொண்ணுக்கு கல்யாணம் பேசுனா நல்லா இருக்காது." விசாலம் பாட்டி நிறுத்த கலைவாணி கவலை தோய்ந்த முகத்துடன் அவரை பார்த்தார்.

"பயப்படாதீங்க. அதை எல்லாம் காரணமா சொல்லி இந்த கல்யாணத்தை நான் தள்ளி போடா விரும்பல. அதுக்கும் ஒரு பரிகாரத்தோட தான் வந்துருக்கேன்" விசாலம் சொல்லவும் "என்ன பரிகாரம்மா? சொல்லுங்க" என்றார் கலைவாணி.

"நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசலாமா?" பாட்டி கேட்க, அவரை அழைத்து கொண்டு கொல்லைப்புறம் இருந்த அந்த சிறு தோட்டத்திற்கு வந்தார் கலைவாணி.

தமிழ்செல்விக்கு அடிவயிற்றில் பயப்பந்து உருண்டது. என்ன சொல்ல போகிறாரோ என பயத்துடனே உள்ளே அமர்ந்திருந்தாள்.

"என் முதல் பேரன் ராமை செல்விக்கு தெரியும். அவனை அவ பார்த்திருக்கா. நல்லா அழகா ஹீரோ மாதிரி இருப்பான். எம்பிஏ முடிச்சிட்டு எங்க பிசினஸ் எல்லாம் பார்த்துக்கறான்.எங்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.