(Reading time: 18 - 36 minutes)
Priyamaanavale
Priyamaanavale

சொத்தெல்லாம் இவங்க ரெண்டு பேருக்கும் தான்." விசாலம் சொல்லி விட்டு கலைவாணியை பார்த்தார். இவர் எதற்க்காக இதெல்லாம் சொல்லுகிறார் என அவரை பார்த்து கொண்டிருந்தார் கலைவாணி.

அவரின் குழப்பமான முகத்தை பார்த்தவர், "சரி நான் நேராவே விஷயத்துக்கு வரேன். என் முதல் பேரன் ராம்க்கு செல்வியை கொடுக்கறிங்களா???" என கேட்க, கலைவாணியின் முகம் அதிர்ச்சியில் உறைந்து போனது. 

சில நொடி அமைதிக்கு பின் பேசிய கலைவாணி "அம்மா, தமிழுக்கு இதுல சம்மதம்னா எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை ஆனா அதுக்கும் முன்னாடி நான் உங்ககிட்ட சில விஷயங்கள் பேசணும். அதெல்லாம் கேட்டதுக்கு அப்பறம் நீங்க முடிவு பண்ணிக்கலாம்" என்றவர் விசாலத்திடம் சொல்லவேண்டியவற்றை சொல்லி முடித்தவர் "நீங்க இப்போவும் இதே முடிவுல இருக்கீங்கன்னா தமிழ்க்கிட்ட இதை பத்தி நேரா பேசி அவ விருப்பத்தை தெரிஞ்சுக்கலாம்மா" என்றார் பாட்டியிடம்.

"என்ன கலைவாணி இப்படி கேட்டுட்டே...இப்போ தான் செல்வியை என் வீட்டு மருமகளா ஆக்கிக்கணும் அபப்டிங்கற எண்ணம் இன்னுமே உறுதியாயிருக்கு. நீ போயி செல்வியை வர சொல்லு. நான் அவ கிட்ட பேசறேன்" என சொல்ல, கலைவாணி உள்ளே சென்றார்.

"பாட்டி " விசாலத்தின் அருகே வந்த தமிழ்செல்வியை ஆதுரமாக தலையில் வருடியவர் "செல்வி நான் உன்கிட்ட ஒன்னு கேக்க போறேன் நீ மறுக்க கூடாது" என, "என்ன பாட்டி இப்படி சொல்லிட்டீங்க...நீங்க எங்க குடும்பத்துக்கு வர இருந்த அவமானத்தை தடுத்து நிறுத்திருக்கிங்க. நீங்க கேட்டு நான் செய்யாம இருப்பேனா?" என்றாள் தமிழ்.

"ஹ்ம்ம்...செல்வி நீ என் பேரன் ராமை கல்யாணம் பண்ணிக்கணும்" பாட்டி சொல்ல, நிலத்தோடு வேரூன்றி போனதை போல ஸ்தம்பித்து போனாள் தமிழ்செல்வி.

"செல்வி, உங்க அம்மா எல்லா விஷயத்தையும் என்கிட்டே சொன்னாங்க..." என அந்த "எல்லா"மில் அழுத்தம் கொடுத்து சொன்னவர்  "நான் உன்கிட்ட இதை பத்தி நேத்தே பேசணும்னு ஆசைப்பட்டேன். அதுக்குள்ள இதெல்லாம் நடந்துடுச்சு. அதனால பரத் இலக்கியாவுக்காக தான் நான் உன்கிட்ட இப்படி கேக்கறேன்னு நினைக்காத" பாட்டி சொல்ல, தமிழுக்கு மூளை யோசனை செய்ய இயலாமல் ஸ்தம்பித்து போனது போல இருந்தது.

இது வரை திருமணம் எல்லாம் அவளின் எண்ணத்தில் வந்ததே இல்லை. அதை பற்றி அவள் யோசிக்கும் நிலையிலும் இல்லை. ஆனால் திடீரென இப்படி ஒரு கல்யாண ஏற்பாடு...இதை அவள் மறுக்க வேண்டுமே...ராமின் முகம் மனக்கண்ணில் முன்னால் வந்து நின்றது, அவனுக்கு இவளை கண்டாலே பிடிக்காதே....இதெல்லாம் இவள் செய்த நாடகம் என

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.