"செல்வி, இலக்கியா நீங்க ரெண்டு பெரும் இந்த வீட்டோட மருமகள்கள் மட்டும் இல்லை. இந்த வீட்டோட பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு போக வேண்டிய கடமையும் உங்களுக்கு இருக்கு. என் ரெண்டு பேரபசங்களும் சின்ன வயசுலயே அம்மா அப்பாவை இழந்தவங்க. என்னால முடிஞ்ச வரைக்கும் நான் அவங்களை நல்லபடியா தான் வளர்த்திருக்கேன். என்ன தான் இருந்தாலும் ஒரு அம்மா இருந்து வளர்க்கற மாதிரி வராது இல்லையா. அவங்க ரெண்டு பேரு கிட்டயும் ஏதாவது குறை இருக்கலாம். அதை எல்லாம் அனுசரித்து இந்த குடும்பத்தை கட்டுக்குலையாம காப்பாத்தற பொறுப்பு உங்க ரெண்டு பேருடையது" என்ற பாட்டி காலில் விழுந்து வணங்கினர் இருவரும். தமிழை சில நிமிடங்கள் இருக்கும் படி சொன்னவர் இலக்கியாவை அழைத்து செல்லும் படி அவரின் உறவினர் பெண்ணுக்கு சொல்ல, அவர் இலக்கியாவை பரத்தின் அறைக்கு அழைத்து சென்றார்.
"செல்வி, நீ இந்த குடும்பத்தின் மூத்த மருமக. இலக்கியாவுக்கு இருக்கறதை விட உனக்கு இன்னும் அதிகமான பொறுப்புகள் இருக்கு. என் மகளும் மருமகனும் இறக்கும் பொது பரத்துக்கு அஞ்சு வயசு தான். அவனை எப்படியோ சமாளிச்சிட்டேன். ஆனா ராம்க்கு அப்போ ஒன்பது வயசு. ஓரளவு விவரம் புரியற வயசு. அவனை அந்த இழப்பு இருந்து வெளிய கொண்டு வர கொஞ்சம் அதிகமாவே கஷ்டப்பட வேண்டி இருந்தது. அதனாலேயே அவன் கேட்டதெல்லாம் கிடைக்கும், அவன் சொல்றது தான் சரினு சொன்னோம். இதுவரைக்கும் அவனை நான் அதட்டியதோ திட்டியதோ அடிச்சதோ கிடையாது. என் கணவர் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டா இருந்தாலும் அவனை அடிக்கவோ திட்டவோ அவருக்கு மனசு வந்தது இல்லை.ஆனா இப்போவும் அவனுக்கு அதே பழக்கம் தொடரரது தான் எனக்கு கொஞ்சம் பயமா இருந்துச்சு. அவனை போலவே செல்லமா ஆடம்பரமா வளர்ந்துட்ட பொண்ணை அவனுக்கு கட்டி கொடுத்தா சரியா வராதுனு நான் கவலை பட்டுட்டு இருக்கும் போது தான் நீ வந்த, எனக்கு உன்னை பார்த்ததும் உன்னை போல ஒரு பொண்ணு தான் அவனுக்கு சரியா இருப்பான்னு தோணுச்சு. உன்கிட்ட பழகுன கொஞ்ச நேரத்துலையே எனக்கு அது புரிஞ்சுது. அதனால தான் உன்னை என்கிட்டே வேலைக்கு வர சொன்னேன். அவனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி உன்கிட்ட கேட்கலாம்னு நினைக்கும் போது தான் பரத் இலக்கியா விஷயம். அதுக்கு அப்பறம் அந்த ஆண்டவன் கிருபைல அவனே உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். அவன் நல்லவன் செல்வி. என்ன கொஞ்சம் பிடிவாதமும் கோவமும் அதிகம். அவனுக்கு யாராவது எதிர்த்து பேசினா பிடிக்காது. அதனால உனக்கு கொஞ்சம் பொறுமை அதிகமாவே தேவைப்படும். என்னடா பாட்டி இப்படி