(Reading time: 28 - 56 minutes)
Priyamaanavale
Priyamaanavale

நிச்சயமா கனவு கண்டுருப்ப... என்ன பாக்கற? என்னடா ஸ்வீட்டி அப்படி இப்படினு சொன்னானே... என்னை பிடிச்சிருக்குனு சொன்னானே... இப்போ என்ன இப்படி பேசறானேன்னு பாக்கறியா? உன்னை பழிவாங்க தான் கல்யாணம் பன்றேன்னு சொன்னா நீ இதோ இப்போ நிக்கறியே அந்த மாதிரி கல்யாண கனவுகளோடு நிக்க மாட்ட.  அதுக்காக தான உன்கிட்ட அன்னைக்கு அப்படி பேசினேன். எனக்கே அந்த மாதிரி நடிக்கிறது ரொம்ப சிரமமா இருந்துச்சு. அதான் அதுக்கு அப்பறம் நம்ம ரெண்டு பேரும் நேரா மீட் பண்ணிக்காத மாதிரி பார்த்துக்கிட்டேன்.என்னவோ நீ ஒரு மாதர் குல மாணிக்கம், மதர் தெரசா அப்படினு எல்லாம் சொன்னான் "உன் பிரென்ட்"அசோக்...எவ்ளோ தைரியம் இருந்திருந்தா என்னை பார்த்த அடுத்த நிமிஷமே அவனை பாக்க போயிருப்ப?" அவனின் கைகள் அவளின் கன்னத்தை அழுந்த பிடித்திருந்தது.

அவளின் பார்வை அவனை வெறித்து பார்த்ததே தவிர பதில் பேசவில்லை.

"உன்னோட இந்த திமிர். இந்த திமிர் தான் இந்த கல்யாணத்துக்கே காரணம். இதை அடக்கி உன்னை என் காலுக்கு கீழ கிடந்து அழ வைக்கணும். என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுக்கு மகாராணியா வாழலாம்னு நினைச்சுட்டு வந்துருப்ப இல்லை... நீ எப்பவும் எங்க பாட்டிக்கு வேலை செய்ற ஒரு நர்ஸ் தான். இந்த ஆடம்பரம் சந்தோஷம் எல்லாம் வெளியுலகத்துக்கு மட்டும் தான். இந்த ரூமுக்குள்ள நீ அதை எதுவுமே எதிர்பார்க்க முடியாது. என் பாட்டிக்கு வேணா நீ இந்த வீட்டு மருமகளா இருக்கலாம். ஆனா எனக்கு நீ எப்பவுமே மனைவி ஆகமுடியாது" அவன் உறும அப்போதும் அவள் முகத்தில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. அந்த பார்வை அவனை இன்னும் கோபம் கொள்ள செய்ய அவன் அவளை அபப்டியே தரையோடு தள்ளினான்.

அவன் தள்ளியதில் கீழே விழுந்தவள் கன்னங்கள் அவன் பிடித்ததில் சிவந்து போயிருந்தது. மெல்ல எழுந்தவள் அவன் அருகே வந்தாள்.

"நீங்க மிரட்டறதாலயோ இல்லை கத்தி பேசறதாலயோ தப்பு சரினு ஆயிடாது, இப்பவும் சொல்றேன் அசோக் ஒரு நல்ல மனிதர், என்னுடைய நண்பர் அவ்வளவு தான். ஆனா இதை நிரூபிக்க என்னால தீக்குளிக்க முடியாது. நீங்களா அதை ஒரு நாள் புரிஞ்சுக்குவீங்க. இப்போ என்னை கோபம் தீர திட்டுனதால உங்களுக்கு கொஞ்சம் பெட்டரா பீல் ஆகும்னு நெனைக்கிறேன். நீங்க வேற எதுவும் சொல்லப்போறது இல்லைனா நான் தூங்கட்டுமா? எனக்கு கொஞ்சம் டையர்டா இருக்கு" என்றவள் அங்கிருந்த சோபாவில் போய் படுத்து கொள்ள இங்கே ராம் கொதித்து கொண்டிருந்தான்.

இங்கே ஒருவன் கத்தி கொண்டிருந்தால் இவள் ஏதோ இவளுக்கும் அதற்கும் சம்மந்தம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.