(Reading time: 28 - 56 minutes)
Priyamaanavale
Priyamaanavale

கண்கள் ஒருமுறை அந்த அறையை சுற்றி வந்தது. அவனுக்கும் ராமுடன் பேச தனிமை தேவை பட்டது.

"பாட்டி படுக்க போயிட்டாங்க. பரத் போன்ல பிசியா இருக்கான்" என்றான் ராம் சாப்பிட்டபடி.

அசோக் ஏதோ ஒரு யோசனையுடன் அமர்ந்திருக்க, "நீ என்ன இந்த நேரத்துல அசோக்? ஏதாவது முக்கியமான விஷயம் பேசணுமா?" என்றான் அந்த "முக்கியமான"வில் அழுத்தம் கொடுத்து.

"ஹ்ம்ம் ஆமாம் ராம். உன்கூட கொஞ்சம் பேசணும்" என அசோக் சொல்ல, எழுந்து கையை கழுவி விட்டு வந்தவன் "வா அசோக் அப்படி லான்ல நடந்துட்டே பேசலாம்" எனவும் அவனுடன் சேர்ந்து வெளியே இருந்த தோட்டத்திற்கு வந்தான் அசோக்.

"சொல்லு அசோக் என்ன விஷயம்?" ராம் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

"ஈவினிங் பாட்டி கிட்ட பேசுனேன். உனக்கும் தமிழுக்கும் மேரேஜ் பிக்ஸ் ஆயிருக்கும் விஷயத்தை சொன்னாங்க. கங்கிராட்ஸ் " அசோக் சொல்ல, "ஹ்ம்ம் தேங்க்ஸ்...பாட்டி சொன்னாங்களா!!!!" என்றான் ராம் உதட்டோரம் உண்டான ஒரு நக்கலான புன்னகையுடன். அந்த லானில் இருந்த இருட்டு அதை அசோக்கின் கண்களில் இருந்து தவறச்செய்தது.

"அப்பறம் ராம்…உன்னோட பிரென்ட் அப்படிங்கிற முறைல தான் இதை சொல்றேன். நீ புரிஞ்சுக்குவேன்னு நெனைக்கிறேன்" அசோக் சொல்ல, "அசோக்....சுத்தி வளைக்காம என்ன விஷயம்னு சொல்லு"ராமின் குரலில் கொஞ்சம் எரிச்சல் எட்டி பார்த்ததோ...

"ராம், தமிழ் ரொம்ப நல்ல பொண்ணு. அழகும் குணமும் பொறுமையும் சேர்ந்து இருக்கும் ஒரு அபூர்வமான பொண்ணு. அது மட்டும் இல்லாம அவளுடைய வாழ்க்கைல அவளுக்கு நடந்தது எல்லாம் இன்னொருத்தர்க்கு நடந்தா அவங்க எல்லாம் எவ்ளோ சுயநலமா இருந்திருப்பங்களோ...ஆனா கொஞ்சம் கூட சுயநலம் இல்லாம..." அசோக் பேசிக்கொண்டிருக்கையில் இடைப்பட்ட ராம் "என்ன அசோக், என் வருங்கால மனைவிக்கு நீ கேரக்டர் செர்டிபிகேட் கொடுக்கத்தான் வந்தியா?" என்றான். இம்முறை அவன் குரலில் வெறுப்பு தெரிந்தது.

"சே சே...இல்லை ராம். உனக்கே அதெல்லாம் தெரியும். உன்னை மாதிரியே அவளும் எனக்கு ஒரு நல்ல பிரென்ட்...அந்த முறைல சொன்னேன். வேற ஒன்னும் இல்லை. சரி நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன். நீயும் நல்லவன் தான். ஆனா இப்போ கொஞ்ச நாளா நீ பழகும் ஆட்களால் நீ பண்ற சில விஷயங்கள் தமிழுக்கு பாதகமா அமையும்" எத்தனை பொறுமையாகவும் நயமாகவும் சொல்ல முடியுமோ அவ்வளவு இதமாக அசோக் சொல்ல, "அசோக், எவ்வளவு தான் பிரெண்டா இருந்தாலும் ஒருத்தருடைய பிரைவேட் ஸ்பேஸ்ல

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.