(Reading time: 28 - 56 minutes)
Priyamaanavale
Priyamaanavale

விஷேஷம்?" என்றான் தமிழ்செல்வியிடம். (இதெல்லாம் தேவையா?? சொல்ல வந்ததை நேரடியா சொல்லிருக்கலாம்ல)

"ம்ம்ம்..." எப்படி சொல்வது என வார்த்தைகளை கோர்த்தவள் "கல்யாண விஷயமா பேச வந்தாங்க" என்றாள் தமிழ்.

"வாட்ட்டட்!!!!!" அசோக்கிற்கு அதிர்ச்சியில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

"யா...யாருக்கு??" தான் கேட்பது முட்டாள் தனமான கேள்வி என தெரியும் அவனுக்கு. ஆனாலும் அடுத்து என்ன, எப்படி கேட்பது என புரியாமல் கேட்டான் அசோக்.

"எனக்கும்....என் தங்கைக்கும்" என்ற தமிழின் பதிலில் இன்னும் குழம்பியவன் "புரியல தமிழ்...உனக்கா இல்லை உன் தங்கைக்கா???" என்றான் மேலும் குழப்பத்துடன்.

"மாப்பிளை வீட்ல ரெண்டு பசங்க" தமிழ்செல்வி சொல்ல, "ஓ..." என்றவன் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தான்.

"எல்லாம் முடிவு பண்ணியாச்சா? உனக்கு....உன் தங்கைக்கு எல்லாருக்கும் பிடிச்சிருக்கா?" இல்லை என சொல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பதில் அப்படி இருக்கப்போவது இல்லை என அவனின் மனதுக்கு தோன்றியது.

"ஹ்ம்ம்... கிட்டத்தட்ட...கூடிய சீக்கிரம்...அடுத்து அவைலபிலா இருக்கற முஹூர்த்தத்துல மேரேஜ் வெச்சுக்கலாம்னு சொல்லிருக்காங்க" அவளின் பதிலில் அதற்க்கு மேல் எதுவும் கேட்கவில்லை அசோக்.

இருவருக்குமான காபி வர, அதை எடுத்து குடித்தவள் "மாப்பிளை யாருனு கேட்கலையே அசோக்???" என்றாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தவன், பார்வையில் அதை கேட்க, "ஸ்ரீராம்" என்றாள் சுருக்கமாக.

குடித்து கொண்டிருந்த காபி புரை ஏற "வாட்ட்ட்ட்டட்!!!" என்றான் அசோக்.

 "ஹ்ம்ம். நேத்து விசாலம் பாட்டியும் பரத்தும் தான் வந்தாங்க" தமிழ்செல்வி சொல்ல, "ஆ...ஆனா...எப்படி????" இதெல்லாம் எப்படி நடந்தது என புரியவில்லை அவனுக்கு.

"பரத்தும் இலக்கியாவும் ஒரே காலேஜ். மூணு வருஷமா லவ் பன்றாங்க" என்றாள் தமிழ்செல்வி. இப்போது அவனுக்கு புரிந்தது.

"என்ன எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க அசோக்" தமிழ்செல்வி அவனின் அமைதி கண்டு கேட்டாள்.

"விசாலம் பாட்டி நல்லவங்க தமிழ். உன்னையும் உன் தங்கையையும் ரொம்ப நல்லா பார்த்துக்குங்க. ஆனா உண்மையிலேயே உன்னை மாதிரி ஒரு பொண்ணு அவங்க வீட்டுக்கு மருமகளா வர அவங்க தான் கொடுத்து வெச்சிருக்கணும். ஆல் தி பெஸ்ட் அண்ட்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.