(Reading time: 28 - 56 minutes)
Priyamaanavale
Priyamaanavale

ஏதோ முக்கியமான விஷயம் என்று அழைத்தது நினைவிற்கு வரவும் அவன் அழைத்த எண் எடுத்து திரும்ப அழைத்தாள்.

மனதில் ஏதோ ஒரு சங்கடம் குடைய இன்று விடுப்பு எடுத்திருந்தான் அசோக். நேற்று தமிழிடம் பேச முடியாமல் போனதை எண்ணி வருத்தமாக இருந்தது. இன்றாவது பேசிவிட முடியுமா? எதற்க்காக பேசிக்கொண்டிருக்கையிலேயே அழைப்பை துண்டித்தாள் என யோசித்து கொண்டு இருக்கவும் அவனின் செல்பேசி அழைக்கவும் சரியாக இருந்தது.

அழைப்பது தமிழ் சென்று அறிந்தவுடன் அதுவரை இருந்த குழப்பங்கள் எல்லாம் மாயமாக மறைய புன்னகையுடன் அழைப்பை ஏற்றான்.

"ஹலோ தமிழ்?" -அசோக்

"ஹலோ, சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டனா?" -தமிழ்

"சே சே அதெல்லாம் ஒன்னும் இல்லை. இன்னைக்கு லீவ் தான்" -அசோக்

"ஓ...சரி. நீங்க நேத்து கால் பண்ணுனப்போ சரியா பேச முடியல. வீட்டுல கொஞ்சம் கெஸ்ட்ஸ் வந்திருந்தாங்க அதான். ஏதோ முக்கியமான விஷயமா பேசணும்னு கூப்பிட்டீங்களே" அவள் குரலே மன்னிப்பு கேட்கும் தோரணையில் இருக்க, "பரவால்லை தமிழ். இன்னைக்கு நீ பிரீயா? நான் ஈவினிங் பாட்டி வீட்டுக்கு வரவா?" அசோக் கேட்கவும் "இ...இல்லை. இன்னைக்கும் நான் லீவ்" என்றாள் தமிழ்.

"ஓ..." அவனின் குரலில் இருந்த ஏமாற்றத்தை உணர்ந்தவள், ஒரு நிமிடம் யோசித்தாள்.

"அவளுக்கு இருக்கும் ஒரு நண்பன் அவன் தான். அவனிடம் இவள் சொல்லாமல் ராம் மூலமாகவோ பாட்டி மூலமாகவோ திருமணம் நடப்பது தெரிந்தால் வருத்தப்படுவானாயிருக்கும்” என்று உணர்ந்தவள், "நான் இங்க சாந்தி நகர் கிட்ட இருக்கேன். இங்க இருக்கும் மால்ல இப்போ மீட் பண்ணலாமா? நீங்க பிரீயா இருந்தா???" தமிழ் சொல்லவும் "ஷ்யர் தமிழ். நீ அங்கேயே வெயிட் பண்ணு. நான் இன்னும் பிப்டீன் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்" என அழைப்பை துண்டித்தவனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. பரபரவென கிளம்பி காரை எடுத்து கொண்டு அந்த மாலை நோக்கி சென்றான். அவன் எப்படி வந்தான் என அவனுக்கு தெரியவில்லை. சரியாக பதினைந்து நிமிடங்களில் அந்த இடத்தை அடைந்தான் அசோக்.

தமிழ் வெளியே காத்திருக்க, ஒரு புன்னகையுடன் இருவரும் அங்கிருந்த ஒரு காபி ஷாப்பிற்குள் நுழைந்தனர்.

இருவருக்குமான காபியை ஆர்டர் செய்த அசோக், "அப்பறம் தமிழ், நேத்து வீட்ல என்ன

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.