(Reading time: 28 - 56 minutes)
Priyamaanavale
Priyamaanavale

என்டர் ஆக கூடாது. எனக்கு தெரியும் என்ன பண்ணனும்னு...எனக்கு யாரும் அட்வைஸ் பண்ணுனா பிடிக்காதுன்னு உனக்கு தெரியாதா? இதுவே கடைசியா இருக்கட்டும். இதை சொல்ல தான் நீ வந்தினா நீ கிளம்பலாம்" ராம் சொல்ல "எனக்கு தெரியும் ராம். உனக்கு அட்வைஸ் பண்ணுனா பிடிக்காதுன்னு. ஆனா இதை நான் இப்போ சொல்லாம போனா, ஒரு வேளை பியூச்சர்ல இதை நான் சொல்லிருக்கலாமோனு நெனைச்சு கில்டி பீலிங்க்ல வேதனை படர மாதிரி ஆயிடக்கூடாதுனு தான் சொல்லவந்தேன். எனிவெ பை குட் நைட்" என்றவன் அவனுடைய பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து கிளம்பினான்.

அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்த அந்த திருமண ஹால் கிட்டத்தட்ட நிரம்பி இருந்தது. அங்கு அமைக்க பட்டிருந்த மணமேடைகளில் ராம் ஒரு மேடையிலும் பரத் ஒரு மேடையிலும் மாப்பிளை கோலத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தனர். முஹூர்த்த நேரம் நெருங்க, மணப்பெண்களை அழைத்து வர சொல்லி அய்யர் சொல்லவும் தமிழ்செல்வியையும் இலக்கியாவையும் அழைத்து வந்தனர்.

அந்த வானம் கொண்ட நீல வண்ணத்தில் பட்டு புடவை சர சரக்க பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பின்னாலும் தேர்ந்த அலங்கார கலைஞர்களால் செய்யப்பட்ட அலங்காரமும் "டெம்பிள் கலெக்ஷன்" என சொல்லப்படும் நகை அலங்காரங்களும் மின்ன அந்த வானில் இருந்து இறங்கிய தேவதை போல நடந்து வந்தாள் தமிழ்செல்வி.

கீழே அமர்ந்திருந்த எல்லோரையும் வணங்கியவள் ராமின் அருகே சென்று அமர்ந்தாள். அவனுடைய தோளோடு அவள் தோள் உரச, அவளுடைய மனதில் இதுவரை இல்லாத ஒரு பயம் உருவானது.  அந்த ஹாலின் ஒரு ஓரத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு ஜோடி கண்கள் இந்த காட்சியை கண்டு சந்தோசத்தில் கண்கள் நிறைந்து தளும்பியது. அந்த கண்களுக்கு சொந்தக்காரர் நன்றியுடன் அங்கு நின்றிருந்த கலைவாணி அம்மாவை கைகூப்பி வணங்கினார்.

தன்னுடைய விருப்பமான சிவப்பு நிற பட்டு புடவையில் அவள் விரும்பி தேர்ந்தெடுத்த சிவப்பு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பின்னலும் முக அலங்காரமும் முழுக்க முழுக்க பவள கற்கள் பதித்த நகைகளும் மின்ன முகம் கொள்ளா பூரிப்பும் சந்தோஷமுமாக பரத்தின் அருகே சென்று அமர்ந்த இலக்கியாவை கண்ட கலைவாணியின் கண்கள் நிம்மதியிலும் சந்தோஷத்திலும் கலங்கியது.

தன்னுடைய வீட்டு மருமக பெண்களுக்கு பார்த்து பார்த்து நகைகளை வாங்கிய விசாலம் அதில் அலங்கார தேவதைகளாக தன்னுடைய குலம் தழைக்க வைக்க போகும் பெண் தெய்வங்களாக அவர்களை பார்த்தார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.