(Reading time: 28 - 56 minutes)
Priyamaanavale
Priyamaanavale

கெட்டி மேளம் முழங்க பெரியோரின் ஆசிர்வாதத்தில் ராம் முதலில் தமிழ்செல்வியின் கழுத்தில் மாங்கல்யம் பூட்ட அடுத்து பரத் இலக்கியாவின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தான்.  

அதன் பின் உள்ள சம்பிரதாயங்கள் முடிந்து ஒவ்வொருவராக வந்து பரிசு பொருட்களும் பூங்கொத்துகளும் கொடுத்து செல்ல தொடங்கினர். வந்தவர்களில் முக்கால்வாசி பேரும் தமிழ்செல்வியும் ராமும் பொருத்தமான மற்றும் அழகான ஜோடி என சொல்லி செல்ல, அருகே நின்று கொண்டிருந்த இலக்கியாவின் முகம் மாற தொடங்கியது.

ஒவ்வொருவராக நகர்ந்து செல்ல, அசோக்கும் அவனுடைய அப்பாவும் வந்து இரு தம்பதிகளுக்கும் வாழ்த்து தெரிவித்து பரிசு கொடுத்து செல்ல, அசோக் தமிழுக்கு என தனியாக இன்னும் ஒரு பரிசுபெட்டியை கொடுத்தான்.

"என்னடா அவளுக்கு ஸ்பெஷல் பாக்ஸ்???" ராமின் கேள்விக்கு புன்னகையுடன் "கொஞ்சம் புக்ஸ் டா. நத்திங் எல்ஸ்" என்ற அசோக் அங்கிருந்து நகர, ஏற்கனவே அஷோக்கையும் தன்னையும் வைத்து ராம் பேசியிருப்பதால் அந்த பயத்தில் மெல்ல ஓரக்கண்ணில் அவனுடைய முகம் பார்த்தாள் தமிழ்.

அவனோ எப்போதும் போல சிரிப்புடன், வருபவர்களிடம் பேசவும் அவளும் அதற்க்கு பின் அதை பற்றி எண்ணுவதை மறந்து போனாள்.

"தமிழ், நீ இருக்கற தைரியத்துல தான் நான் இலக்கியாவை பத்தி கவலைப்படாம போறேன். நீ தான் அவளை பார்த்துக்கணும். இப்போ வேற முழுகாம இருக்கா. அவளுடைய கோபமும் பேச்சுகளும் நீ பெரிசு பண்ணிக்காதடா. அவளை பார்த்துக்கோ. என்னடா அம்மா, அவளை பார்த்துக்க சொல்றனே தவிர உன்னை பத்தி யோசிக்கலைனு நெனைக்கிறியா தமிழ்? உன்னோட நல்ல மனசுக்கு நீ போற இடம் எல்லாம் உனக்கு நல்லதே நடக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்குடா தமிழ்" என கண்கள் கலங்க தமிழை உச்சி முகர்ந்தார் கலைவாணி.

"அம்மா நீங்க எதை பத்தியும் கவலை படாதிங்கம்மா. நான் இலக்கியாவை பார்த்துக்கறேன். நீங்க உங்க உடம்பை பார்த்துக்கொங்க. காவ்யாவை நல்லா படிக்க சொல்லுங்க. என்ன வேணும்னாலும் எனக்கு போன் பண்ணுங்க. நான் பேங்க் அக்கௌன்ட் நம்பர், கார்டு பின் நம்பர் எல்லாம் டைரில எழுதி வெச்சுருக்கேன். எனக்கு தெரியாம டியூஷன் எல்லாம் எடுக்க கூடாது" என இன்னும் என்னெல்லாம் சொல்ல நினைத்திருந்தாலோ எல்லாவற்றையும் சொல்லி கொண்டிருக்க, கலைவாணியின் கண்கள் நிறைந்து போனது.

"சரிம்மா. நீங்க போயி இலக்கியா கிட்ட பேசுங்க. என்கிட்டயே பேசிட்டு இருந்தா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.