(Reading time: 28 - 56 minutes)
Priyamaanavale
Priyamaanavale

துப்பட்டாவை சீராக்கி கொண்டு உள்ளே சென்றாள்.

"ஸ்ரீராம்" என பொன்னிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அறைக்கதவை மெல்ல தட்டியவள் அதனை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.

அந்த பெரிய அறையின் உள்ளே நடுநாயகமாக அமர்ந்திருந்தான் ராம். அறைக்கதவை தட்டிய சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவன் "ஹலோ தமிழ், கம் கம். வெல்கம் டு மை கம்பெனி" என்றான் அவன் பழிவாங்க செய்திருப்பான் என்று எண்ணிய அவளின் எண்ணங்கள் எல்லாம் தவிடுபொடியாகும் புன்னகையுடன். அதுவே அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மெதுவாக உள்ளே நுழைந்தவள் அவளுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

"சொல்லு தமிழ். நீ ஏதோ என்கிட்டே பேசிட்டு தான் முடிவு சொல்லுவேன்னு சொல்லிருந்தியாம். பாட்டி சொன்னாங்க" அவன் நீண்ட காலம் பழகியவனை போல வார்த்தைக்கு வார்த்தை தமிழ் என விளிப்பது எப்படி என அவளுக்கு புரியவில்லை. இத்தனை நாளில் ஒருமுறைகூட அவன் அவளிடம் சிரித்து பேசியது இல்லை. அபப்டி இருக்கையில்????

"ஹலோ என்ன நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். நீ ஏதோ ஒரு யோசனைல இருக்க?" ராம் அவள் முன் விரல்களால் சொடுக்கவும் தன்னிலை அடைந்தவள் "அ....அது...பாட்டி சொன்னாங்க....நீங்க....என்னை..." முழுதாக சொல்ல தயங்கி அவள் வார்த்தைகளை மென்று விழுங்க, அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்தவன் அவள் அமர்ந்திருந்த இருக்கையின் அருகே வந்து அங்கிருந்த டேபிளில் சாய்ந்து நின்றான். அவன் அருகே நிற்க, அவள் அமர்ந்திருப்பது அவளுக்கு சங்கடமாக இருந்தது. ஆனாலும் எழுந்து கொண்டால் எங்கே அவன் மேல் இடித்து விடுவோமோ என்று அப்படியே அமர்ந்தாள்.

"நான்...உன்னை....?" அவள் விட்ட வார்த்தைகளை அவன் கோர்க்க, இவள் தலை குனிந்து அமர, அவனுடைய விரல்கள் இவளின் மோவாயை தொட்டு தலையை நிமிர்த்தியது.

"எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. அதனால இந்த கல்யாணத்துக்கு நான் தான் உங்க வீட்ல பேச சொன்னேன். இதை தான கேட்க வந்த?" அவனின் கேள்வியில் ஆமாம் என பதில் சொல்ல எண்ணினாலும் அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. அவளின் விரிந்த விழிகள் அவனையே பார்க்க, சிலநொடிகள் அவளின் அந்த கண்களை பார்த்தவன் அவனின் கையை விலக்கி கொண்டு நேரே நின்றவன் "வேற ஏதாவது கேட்கணுமா?" என்றான் தமிழ்செல்வியிடம்.

"நான் என்னை பத்தி....என்னை பத்தி உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்....என்னுடைய பாஸ்ட்..." அவள் சொல்லிமுடிக்கும் முன் அவளை தடுத்தவன் "ஐ டோன்ட் கேர் அபௌட் யுவர் பாஸ்ட். யுவர் பியூச்சர் இஸ் கோயிங் டு பீ வித் மீ. தமிழ், என் தம்பி பரத்துக்கும் உன் தங்கைக்கும் கல்யாணம் நடந்தாகணும்...அது கண்டிப்பா நடக்கும். அதே போல உனக்கும் எனக்கும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.