(Reading time: 28 - 56 minutes)
Priyamaanavale
Priyamaanavale

இல்லாதது போல போகிறாள். அவன் எதிர்பார்த்தது வேறு நடப்பது வேறு. அவன் காலில் விழுந்து அழுவாள் என எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் அவளின் கர்வம் அப்படி ஆனால் அவனிடம் சமரசம் செய்ய முயலுவாள், ஒரு வாய்ப்பு தருமாறு கேட்பாள் என எண்ணியிருந்தான். ஆனால் அவளோ இப்படி கத்தியதால் அவனுக்கு டென்சன் குறையும் என்று கூறி அவனை மனநோயாளி ஆக்கிவிடுவாள் போலவே என்று எண்ணியவன் கோபத்தில் அவள் படுத்து இருந்த சோபாவை பார்க்க அவளோ உண்மையிலேயே ஓய்ந்து போயிருந்ததாலோ என்னவோ உறங்கி போயிருந்தாள். அவள் நடிக்கிறாளோ என்று எண்ணி அவள் அருகே சென்று பார்த்தான். அவளின் சீரான மூச்சு அவள் உறங்கிவிட்டாள் என்பதை உணர்த்தியது. அந்த குளிரில் அவள் அணிந்திருந்த பட்டுபுடவையின் முந்தானையால் இழுத்து போர்த்தியபடி படுத்திருந்த அவளின் அந்த மாசுமருவற்ற முகத்தில் தெரிந்த குழந்தை தனமும் அந்த அழகிய முகமும் அவனை மயக்கியது. இப்படி அழகை காட்டி என்னை மயக்கிடலாம்னு தான நெனைச்சிருக்கா என்று அந்த பழியை அவள் மேல் தூக்கி போட்டான்.

இன்னும் சிறிது நேரத்தில் இந்த புடவைக்கெல்லாம் அந்த குளிர் தாங்காது உறங்க முடியாமல் தவிக்கட்டும் என்று எண்ணியவன் தன்னுடைய மெத்தையில் வந்து குளிருக்கு இதமாக அங்கிருந்த கம்பர்ட்டரை போர்த்தி கொண்டு படுத்தான். அந்த இரவு விளக்கின் வெளிச்சத்தில் அவள் ஒரு தேவதையை போல இருந்தாள். தடுமாறிய மனதை அதட்டியவன் அவளுக்கு முதுகை காட்டி திரும்பி படுத்து கொண்டான். சிலநிமிடங்களுக்கு பின் அந்த அறை முழுதும் குளிரால் நிரம்ப உடலில் மெல்லிய நடுக்கம் உண்டாக எழுந்து அமர்ந்தாள் தமிழ்செல்வி. அங்கு அவளுக்கு முதுகை காட்டி படுத்திருந்த ராமை கண்டதும் அவளுக்கு அவள் இருக்கும் இடம் புரிந்தது. அவனிடம் இருந்து வந்த மெல்லிய குறட்டை ஒலி அவன் உறங்குவதை உணர்த்த அந்த சோபாவில் இருந்து எழுந்து அமர்ந்தாள் தமிழ்.

இந்த திருமணம் நல்ல படியாக முடியவேண்டும் என்ற டென்ஷனில் இரண்டு வாரங்களாக உறங்க முடியாமல் தவித்தவளுக்கு இன்று உண்மையிலேயே அவன் பேசியது அதிர்ச்சியை உண்டாக்க வில்லை. அவள் இதை தான் எதிர்பார்த்திருந்தாள் ஆனால் அதற்க்கு மாறாக அவன் ஸ்வீட்டி என்றெல்லாம் பேசியது தான் அவளை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. அவளை பொறுத்த வரை அவளை பழி வாங்குவதாக எண்ணி அவன் வாழ்க்கையை கெடுத்து கொள்ளக்கூடாதே என்று தான் எண்ணினாள். அவளுக்கு திருமணம் பற்றிய எதிர்பார்ப்பெல்லாம் இருந்ததில்லை. அதெல்லாம் மறந்து போய் மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.  இலக்கியாவிற்கு நல்ல வேலை, நல்ல இடத்தில் திருமணம், காவ்யாவை எப்படியாவது மருத்துவ கல்லூரியில் சேர்த்துவது, அதற்க்கான பணத்திற்கு ஏற்பாடு செய்வது,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.