(Reading time: 15 - 30 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

தேடி வரவில்லை?. அந்த குழந்தை அவனிடம் இருக்கிறதா?. ஒருவேளை டாக்டர் சொன்னது போல் கல்யாணம் செய்து அவனை டைவர்ஸ் செய்துவிட்டாளா..? அந்த குழந்தை உயிருடன் இருக்கிறதா இல்லையா?.. அவனுக்கு நிறைய கேள்விகள் வந்தன.

எல்லாமே இருப்பது போலவும் தோன்றியது ஆனால் உண்மையில் எதுவுமே இல்லாமலும் இருக்கிறது. இதை எப்படி சரி செய்வது என்று குழம்பினான்.

ஒருவேளை ரேச்சல் யாரிடமாவது ஏமாந்து போய்… சே… சே… அவள் அப்படிபட்டவள் அல்ல… ரொம்ப நல்ல கேரக்டர் உள்ள பெண். ஆனால் ஒரு வருடம் கழித்து அவளை எதற்கு அங்கிள் சென்னையிலிருந்து அழைத்து வந்தார்.

ரேச்சலிடம் இருக்கும் மர்மம்தான் என்ன?. ஒருவேளை இது அங்கிளுக்கு தெரிந்திருந்தால்… கண்டிப்பாக அவனிடம் தெரிவித்து இருப்பார். தொலைபேசியின் வாயிலாக இந்த விஷயத்தை சொல்ல அவர் தயங்கி இருந்தால் என்ன செய்திருப்பார்?. ஈமெயிலில் அவனுக்கு விவரத்தை தெரிவித்திருக்கலாம்!. அப்படி அவனுக்கு எதுவும் வரவில்லை. ஒருவேளை அவர் ஏதாவது எழுதி அவனுக்கு அனுப்ப தயங்கி டிராப்ட் மோடில் வைத்து இருக்கலாமோ என்று அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. அதையும் பரிசோதித்து விடலாமே...ம்… ஆன்ட்டிக்கு அவருடைய மெயில் ஐடியின் பாஸ்வேர்ட் தெரியுமா?.

"மேத்யூஸின் நினைவு வருவதால் நான் அந்த ஐடியை பார்க்கவில்லை. நீ தேடும் ஷேர் சர்டிபிகேட்டின் காப்பி அதில் இருக்கலாம். அவர் அனைத்து பாஸ்வேர்ட்களையும் டைரியில் எழுதி வைப்பார். சில சமயம் மொபைலில் கூட வைத்திருப்பார். நீ தேடி பார். மொபைலில் இல்லை எனில் நாகர்கோவில்தான் போக வேண்டும். மிக முக்கியமான விஷயம் என்றால் நீ அங்கே போய் பார் " என்று மேத்யூஸின் அலைபேசியை தந்தார்.

மேத்யூஸ்தான் அவனுடைய பணத்தை ட்ரேடிங்கில் முதலீடு செய்திருந்தார். அதற்கான சர்டிபிகேட் வேண்டும் என்று அவன் பொய் சொல்லி ஐடி பாஸ்வேர்டை கேட்டான். அவருக்கும் சரியாக தெரியவில்லை. அலைபேசியில் இருந்தால் மிக மிக நல்லது. இல்லையெனில் நாகர்கோவில்தான் செல்ல வேண்டும்.

ஜெமி நம்பிக்கையுடன் அலைபேசியை ஆன் செய்தான். காலரியில் தேட ஆரம்பித்தான். அதில் மேத்யூஸும் ரேச்சலும் இருந்த புகைப்படங்கள் இருந்தன. ரேச்சலிறன் மணவாழ்க்கைபற்றி ஏதாவது போட்டோ இருக்கிறதா என்று தேடினான். எதுவும் இல்லை. கடைசியாக சென்னை பஸ்ஸில் ஏறும் முன் ஒரு செல்பி எடுத்திருந்தனர்…. பிங்க நிற லாங் குர்தியும் நீல நிற பேண்ட்டும் அணிந்து ரேச்சல் தெளிவாக சிரித்தாள்…. ப்ச்… அவளிடம் குறிப்பிடத்தக்க எந்த மாற்றமும் தெரியவில்லையே…!

பொறுமையாக அவன் மோபைல் முழுவதும் தேடியும் ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.