(Reading time: 15 - 30 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

"கரெக்ட் டாக்டர். அன்னிக்கு நீங்கள் செய்த முயற்சியால்தான் ரேச்சல் பிழைத்தாள்"

"அவங்க அம்மா டாக்டர்ஷீலா.. அவங்க எப்படி இருக்காங்க. அவங்களால அந்த சிச்சுவேஷனை தாங்கவே முடியலை. மேத்யூஸ் இரண்டு நாள் நல்லாதான் இருந்தார். அப்புறம் சீரியஸ் கண்டிஷன்… ரேச்சலுக்கு படுகாயம்… பிழைப்பாங்களானு நிலை… அப்போ மேத்யூஸும் இறந்து போக ஷீலா மயங்கி விழுந்துட்டாங்க. அவங்களை இங்கேதான் நாங்க பெட்டில் ஒருவாரம் வைத்திருந்தோம். நாங்களாகவே சில சிகிச்சை முடிவுகளை எடுத்து ரேச்சலை காப்பாற்ற வேண்டியதாயிடுச்சு. "

"ரேச்சல் அப்பவே சுயநினைவில்லாமல்தான் இருந்தாங்களா…. அதுக்கு சிகிச்சை எதுவும் தரலியா?'

"அப்ப அவங்க உயிரை காப்பாத்துனால் போதும்னு இருந்தது. சில ஆப்ரஷன்ஸ் செய்தோம்… மோர் ஓவர் அவங்க நியு மாம் வேறயா…"

"நியூ மாம்…?"

"ஆமாம்… குழந்தை பிறந்த பிறகு தாயின் உடல்நிலை பழையபடி நார்மல் ஆக மூன்றிலிருந்து ஐந்து மாதங்கள் ஆகும். அந்த நேரத்தில் மனநல பாதிப்பிற்கான மருந்துகள் தரக்கூடாது…" அவர் பேசிக் கொண்டே போனார்.

ஜெமிதான் குழம்பிப் போனான். அவன் இங்கு வந்ததே அதுபற்றி கேட்கத்தான். ரேச்சலின் மெடிக்கல் ரிப்போர்ட்டில் அவள் சமீபத்தில் தான் தாய் ஆகி இருக்கிறாள் என்ற ஒரு வார்த்தை இருந்தது போஸ்ட்போர்ட்டம் சிம்டம்ஸ் அவளிடம் இருப்பதாக இருந்தது. அதுதான் அவனை குழப்பியது. அதுபற்றி தெரிந்து கொள்ளதான் அங்கு வந்தான். மருத்துவர் சொல்வதைக் கேட்டால் அது உண்மை தான் போலிருக்கிறது.

"....அதனாலதான் அவங்களோட மெமரி லாஸ் பத்தி அப்ப கவனிக்கலை. ஆறு மாசம் கழிச்சு அதற்கான ட்ரீட்மென்ட் தரலாம்னு விட்டுட்டோம். இப்ப எப்படி இருக்காங்க"

"இன்னும் அம்னீசியாலதான்.இருக்காங்க…"

"அதற்கான சிகிச்சையை இப்ப ஆரம்பிக்கலாமானு செக் பண்ணிதான் முடிவெடுக்கனும். ஆமாம்.. நீங்க யாரு… அவங்க ஹஸ்பெண்டா.." உள்ளுக்குள் அலார்ம் அடிக்க சட்டென மறுத்தான்.

"நோ… டாக்டர் நான் ரேச்சலின் கஸின். ஜெரோம்…"

"அவர் எங்கே… அப்பவே வரலை… வெளிநாடுல இருக்கறதா மேத்யூஸ் சொன்னார். டைவர்ஸா.. குழந்தை யார்ட்ட இருக்கு.." படபடனு டாக்டர் பேச ஜெமி திகைத்தான். இது பெரிய சிக்கலாக இருக்கிறதே…

"மிஸ்டர் ஜெரோம். ரேச்சலோட ஹஸ்பெண்ட் வந்தாதான் முடிவெடுக்க முடியும். அட்லீஸ்ட் ரேச்சலையாவது செக்கிங்கிற்கு கூட்டிட்டு வாங்க."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.