(Reading time: 15 - 30 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

"சரி நான் வருகிறேன்." பதிலுக்கு காத்திராமல் வெளியே வந்தான். காரில் தெருமுனைக்கு வந்தபோது… ரஞ்சன் காத்திருந்தான்.

"ஒரு விஷயமும் சிக்கலை…" சத்யன் சொன்னான்.

"எனக்கு ஒரு ஹோல்ட் கிடைச்சிருக்கு. நீ பக்கத்துல இருக்கும் அம்மன் கோவில் வாசலுக்கு போ" ரஞ்சன் சொன்னான்.

"என்ன?"

"அங்கே பார்… அந்த பையன் மீரா வீட்டருகில் இருக்கும் டீக்கடையில் வேலை பார்க்கிறான். அவனுக்கு ஏதோ விஷயம் தெரிந்திருக்கிறது… என்னை இங்கே வர சொன்னான்." அவனிடம் சொன்னபடியே காரை விட்டு இறங்கனான். அவனை தொடர்ந்து காரை விட்டிறங்கிய சத்யனை பார்த்த அந்த பையன்..

"சார்… வணக்கம் சார். நீங்க மீரா அக்காவோட புருஷன்தான. உங்கள்ட்ட ஒன்னு சொல்லனும்னு காத்திருக்கேன்."

"சொல்லு தம்பி.. அன்னிக்கு என்ன நடந்தது?'

"அக்கா வீட்டை விட்டு வெளியே வந்தாங்க.."

"கத்தி கூச்சல் போட்டுட்டு வந்தாளா..?"

"இல்லண்ணா… அவங்க அழகா டிரஸ் பண்ணியிருந்தாங்க. ரோஸ் கலர்ல சுடிதார் போட்டு நீல நிறத்துல பேண்ட் போட்டிருந்தாங்க. சாதாரணமாக வந்தவங்க பின்னாடி இவங்க ஓடி வரவும்… அவங்க ஓட ஆரம்பிச்சாங்க…"

"எதுக்கு ஓடணும்?"

"அவன்… அந்த ஆள் ரொம்ப மோசம். அக்காவை அடிப்பான்… அவன்தான் அக்காவை துரத்திகிட்டு ஓடினான்."

"அக்காவோட அப்பாவா?"

"இல்லை இன்னொருத்தன்… உங்க கல்யாணத்துக்கு முன்னாடி தினமும் அவங்களை அவன் அடிப்பான். அக்கா அழுவாங்க… சில சமயம் இந்த கோவிலுக்கு ஓடி வந்துடுவாங்க…"

"யார் அவன்?"

"அந்தம்மாவோட தம்பினு சொல்லுவாங்க.பேரு…"

"பரத்தா…"

"அப்படித்தான் சொல்லுவாங்க"

ராஸ்கல் அவன் எதற்கு மீராவை அடிக்கணும்.. துரத்தணும்…

"ஓகே தேங்க்ஸ் தம்பி…"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.