(Reading time: 15 - 30 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

"எனிதிங் ஸ்பெஷல்.. ப்ரபோஸல்…?" ஆர்வம்போல விசாரித்தாள். அந்த கேள்விக்கான பதிலை சத்யனும் எதிர் நோக்கினான்.

"ப்ச்… ஒண்ணுமில்ல.. லக்கி ஸ்டோன் கேட்டேன்னு வாங்கி வந்தான்"

"ஓ… நான் இது உன்னுடைய எங்கேஜ்மென்ட் ரிங்னு நினைச்சேன்…"

"எங்கேஜ்மென்டா… நோ… நோ அதெல்லாம் கிடையாது. "

"கரெக்ட்… அதுக்கெல்லாம் நாள் பார்த்து செய்யணும்ல"

"நோ… நோ.. அது மாதிரி என் லைஃப்ல எதுவும் எப்பவும் கிடையாது. நான் மம்மிகூட இருப்பேன். எனக்கு அவங்க போதும்…"

"ஓ… அப்படி சொல்ல கூடாது… உனக்குனு ஒரு லைஃப் பார்டனர் வேணும்.. ஜெமியை பிடிக்கலைனா வேறு யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ…"

"பிரச்சினை அது இல்லை… ஜெமி நல்ல ஃப்ரண்ட்… எனக்குதான் கல்யாணம் செய்துக்க விருப்பமில்லை"

"ஏன்.."

"நாம யாரு?.. நம்ம விருப்பம் என்னனு தெரியாத நிலையில் எப்படி கல்யாணம் செய்துக்க முடியும்."

"குழப்பமா பேசுற"

"அதுதான் சிக்கல்… நான் ரொம்ப குழம்பி இருக்கேன். ஆனால் ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கேன். நோ மேரேஜ்…"

அந்த ஸ்டேட்மென்ட் சத்யனை நிம்மதியடைய வைத்த அதே நேரத்தில் நந்தினியை அதிர வைத்தது…

அவ்வளோதானா…? என்பது போல ரஞ்சனை பார்த்தாள்.. அவன் பார்வையை அமர்த்தி 'ஈஸி ஹனி' என்று சைகை செய்தான்.

அதற்குள் சத்யன் அவனருகில் வந்து விட்டான்.

"பேசிட்டியா… லெட்ஸ் கோ" என்றழைத்தான்.

இந்த பெண்ணுக்கு என்ன பிரச்சினை… என்று ரஞ்சன் யோசிக்க… இப்போதைக்கு பிரச்சினை இல்லை என்ற லகுவான மனது சத்யனுடையதாகியது. ஆனால் இந்த நிம்மதி ஏன் உருவாகியது என்று அவனுக்கு புரியவில்லை. அதை ஆராய்ச்சி செய்ய மனமின்றி அப்படி கடந்து போனான்.. ஆல் ஈஸ் வெல்…! அது போதும்.

ஜெமி தன்னிடம் இருந்த மெடிக்கல் ரிப்போர்ட்டை பற்றி ஷீலாவிடம் விசாரித்தான்.

"ஆன்ட்டி… இந்த ரிப்போர்ட்டை நீங்கள் படித்தீர்களா…?"

"இல்லை ஜெமி.. உனக்கு விவரம் தெரிந்ததா?'

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.