(Reading time: 8 - 16 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

“பார்க்கலாம்மா... இப்போதானே லெட்டர் வந்திருக்கு... இனிமே ஒண்ணொண்ணா பண்ணலாம்....”, வேணு சொல்ல சீதா இந்த சந்தோஷத்தை கொண்டாட இனிப்பு செய்ய கிளம்பினாள்...

அரை நாள் பள்ளி முடிந்து மற்ற பிள்ளைகளும் வர அவர்களிடமும் செய்தி பரிமாறப்பட்டது... முதலில் சந்தோஷப்பட்டாலும் ரகு தங்களுடன் இல்லாமல் தூரமாக போகிறானே என்ற வருத்தம் பிள்ளைகள் முகத்தில்..... அதுவும் கிரிக்கெட் பயிற்சி முடிந்து வந்த மைத்தி முகம் மிக சோகமாகிவிட்டது....

மாலை வந்த பெரியர்வர்கள் விஷயம் கேள்விப்பட்டு மிக சந்தோஷப்பட்டார்கள்.... தங்கள் தெரிந்த வட்டத்தில் யார் டெல்லியில் இருக்கிறார்கள் என்ற மும்முரமாக ஆராய ஆரம்பித்தார்கள்... ரகுவும் வேலை முடித்து வர அங்கே கொண்டாட்டம் ஆரம்பம் ஆகியது.... முதல் அட்டெம்ப்டிலேயே வேலை கிடைத்தது கூடுதல் மகிழ்ச்சி அவர்களுக்கு....

அடுத்த இரண்டு வாரங்கள் ரகு டெல்லி செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதில் கழிந்தது.... கிருஷ்ணன் மற்றும் அனந்துவுடன் வேலை செய்பவருடைய தம்பி டெல்லியில் இருக்க அவருடன் ரகுவிற்கு வீடு கிடைக்கும்வரை தங்க ஏற்பாடாகியது,,,,,

மற்றவர்கள் ரகு வேலை நிமித்தம் பிரிவதை ஓரளவு ஏற்றுக்கொண்டாலும் மைத்தியால் சகஜ நிலைக்கு வர முடியவில்லை.... சந்தோஷம், துக்கம் எந்த விஷமாக இருந்தாலும் ரகுவிடமே முதலில் பகிர்ந்து பழக்கப்பட்டவள் மைத்தி... மற்ற மாமா பிள்ளைகள் இருந்தாலும் அவளிற்கு எல்லாவற்றிக்கும் ரகு வேண்டும்... அவளின் வருத்தத்தை புரிந்து கொண்ட ரகு தான் கிளம்புவதற்கு இரு நாட்கள் முன் அவளை அழைத்துக்கொண்டு எப்பொழுதும் போல் கபாலி கோவிலிற்கு சென்றான்.... வழக்கம் போல் ஸ்வாமியை தரிசித்து இருவரும் குளத்து படிக்கட்டில் அமர்ந்தனர்.....

“என்னடா குட்டி ரெண்டு வாரமா ஒரே சோக வயலின் வாசிச்சுண்டு இருக்க....”

“ப்ச் அப்படிலாம் ஒண்ணும் இல்லை ரகுண்ணா....”

“சொல்லுடா குட்டி.... நீ எப்பவும் மாதிரி இல்லை.... விளையாடும்போதும் பழைய ஜோஷ் இல்லைன்னு அன்னைக்கு உன்னோட கோச் பாஸ்கர் சார் சொன்னார்... என்னாச்சு....”, ரகு கேட்க, கண்கள் கலங்க வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள் மைத்தி.... அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி, அவளை நீ சொல்லித்தான் ஆக வேண்டும் என்று பார்த்தான் ரகு....

“அது நீ டெல்லி கிளம்பற இல்ல... அதுதான் கஷ்டமா இருக்கு... இனிமே எனக்கு ஏதாவது வேணும்ன்னா நான் யார்கிட்ட கேக்கறது... நீ மட்டுந்தான் நான் சொல்றதை கரெக்டா புரிஞ்சுண்டு எனக்கு சாதகமா பேசுவா... பாட்டி, தாத்தா ஏதானும் சொன்னாலும் அவாளுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.