(Reading time: 8 - 16 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

புரியறா மாதிரி எடுத்து சொல்லி ஒத்துக்க வைப்ப...”

“இதுக்காகவா கண்ணை கசக்கிண்டு இருக்க.... நான் வாரா வாரம் பக்கத்தாத்துக்கு போன் பண்றேன்... அப்போ உனக்கு என்ன வேணுமோ சொல்லு... பண்ணிடலாம்... அதே மாதிரி நான் அத்திம்பேர் கிட்ட சொல்லிட்டு போறேன்... நோக்கு கிரிக்கெட் விளையாடறதுக்கு என்னலாம் தேவையோ அதெல்லாம் பண்ண சொல்லி... இப்போ தாத்தா, பாட்டி உன்னோட விளையாட்டை பத்தி ஓரளவு நன்னா புடிஞ்சுண்டுட்டா..... அதனால இனிமே உனக்கு விளையாட பெரிய தடை இருக்கப்போறதில்லை.... நன்னா சூப்பரா ப்ராக்டிஸ் பண்ணி ரஞ்சி டீம்ல விளையாட நீ செலக்ட் ஆகணும்... சரியா...”

“கண்டிப்பா ரகுண்ணா.... நான் நன்னா விளையாடி செலக்ட் ஆவேன்... ஆனாலும் நீ இல்லாம இருக்கறது நேக்கு கஷ்டம்தான்....”

“நேக்கும் கஷ்டம்தாண்டா குட்டி... என்ன பண்றது சொல்லு.... சீக்கிரமே ட்ரான்ஸ்பர் வாங்கிண்டு இந்த பக்கம் வர முடியறதா பார்க்கறேன்....”

“அதெல்லாம் குறைஞ்சது நாலஞ்சு வருஷத்துக்கு முடியாதுன்னு கிருஷ்ணன் மாமா சொல்லிட்டார்.... ரெண்டாவது அங்க இருந்தாதான் உனக்கு மேல மேல ப்ரமோஷன் வர்றதுக்கு வாய்ப்பு இருக்காம்.... இந்த பக்கம் வந்தா அந்த அளவு முன்னேற முடியாதுன்னு சொன்னார்... எங்களுக்காக உனக்கு வரப்போற சான்ஸ் மிஸ் பண்ணாத ரகுண்ணா... கொஞ்ச நாளைக்கு கஷ்டமா இருக்கும்... அப்பறம் பழகிண்டுடுவோம்.... ஆனா கண்டிப்பா நீ வாரத்துக்கு ஒரு நாள் போன் பண்ணனும்... நாங்க எல்லாம் உன் கால்க்காக வெயிட் பண்ணிண்டு இருப்போம்...”, மைத்தி கூற தான் கண்டிப்பாக அவர்களுக்கு அழைப்பதாக வாக்கு கொடுத்தான்....

அடுத்த வாரத்தில் ரகு கிளம்பி டெல்லி செல்ல குடும்பம் சற்று தோய்ந்துதான் போனது... நினைத்தவுடன் சட்டென்று பார்க்க முடியாத தூரம், வாரம் ஒரு முறை அவன் பேசும்போது மட்டுமே அவன் நலம் அறிய முடியும் என்று நிலை என்று வருத்தம் இருந்தாலும், அடுத்த தலைமுறையின் மூத்த மகன் நல்ல வேலையில் அமர்ந்தது மகிழ்ச்சியையும் கொடுத்தது....

அடுத்த இரண்டு மாதங்களில் ரஞ்சிகோப்பை போட்டிகளுக்கு செலெஷன் நடைபெறுவதாக இருக்க இவர்களின் பயிற்சியும் தொடர்ந்தது.... இதற்கு முந்தைய போட்டியில் மைத்தியும், துளசியும் அபாரமாக விளையாடி இருந்ததால் அவர்கள் தேர்வாவதற்கு எந்த தடங்களும் இருக்காதென்று பாஸ்கர் மிக உறுதியாக நம்பினார்....

அவரின் முடிவு சரியே என்பதுப்போல மைத்தியும், துளசியும் தமிழ்நாடு அணிக்காக விளையாட தேர்வானார்கள்...

எண்பதுகளின் கால கட்டங்களில் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதே அரிது.... தடகளப் போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுடன் இருப்பவர்கள் கூட கிரிக்கெட் என்று வரும்போது அது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.