(Reading time: 28 - 56 minutes)
Priyamaanavale
Priyamaanavale

கட் பண்ணிட்டேன். நான் போயி பூ பரிச்சிட்டு வந்துடறேன்" என்றவள் அங்கிருந்து நகர, "பாப்பா தலை இன்னும் ஈரமா இருக்கும் போல. தொடைச்சிட்டு போம்மா " என்றவரின் வார்த்தைகள் அவளின் காதுகளில் விழுந்ததா என தெரியவில்லை.

"இங்க வந்து ஒளிஞ்சுக்கிட்டு இருக்கியா?" தோட்டத்தில் வீசிய அந்த காலை நேர காற்று மனதிற்கு இதம் தருமா என்ற ஒரு ஏக்கத்தில் அமர்ந்திருந்த தமிழ்செல்வி இலக்கியாவின் குரலில் திடுக்கிட்டு எழுந்தாள்.

"இ...இலக்கியா..." தமிழ்செல்வியின் முகத்தை பார்த்த இலக்கியா, "அம்மா கால் பண்ணுனாங்க. நீ இன்னைக்கு சாப்பிடாம இருக்கவேணாம்னு சொல்ல சொன்னாங்க. இன்னும் என் கிட்ட இருந்து எதெல்லாம் பறிக்கலாம்னு இருக்க? அண்ணனை கொன்னுட்ட...இன்னைக்கு அண்ணாவோட நினைவு நாள் ஆனா அம்மா உன்னை பத்தி கவலை படறாங்க. இன்னும் இந்த அழுமூஞ்சி நாடகத்தை வெச்சு எத்தனை பேரை என்கிட்டே இருந்து பிரிக்க போற???" கோபத்தில் கத்திய இலக்கியாவின் கையை பற்றினாள் தமிழ்செல்வி.

"இலக்கியா...ப்ளீஸ்....சாரி இலக்கியா" அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

அவளின் கையை உதறிய இலக்கியா "சே...உன்னை பாக்கவே எனக்கு பிடிக்கல. நீ ஒரு கொலைகாரி...உன்னை...." என்றவள் தமிழின் கழுத்தை தன்னுடைய இரு கைகளால் அழுந்த பிடிக்க, அசையாமல் கண்களில் கண்ணீர் வழிய நின்றிருந்தாள் தமிழ்.

"இலக்கியா என்ன பண்ற...கையை எடு" உள்ளே இருந்து ஓடி வந்த பரத் அவளின் கைகளை விலக்க "என் கண் முன்னாடி இன்னைக்கு வந்திடாத..." என்ற இலக்கியா அங்கிருந்து வேகமாக வீட்டை நோக்கி சென்றாள்.

"அண்ணி சாரி அண்ணி..." அவளின் முகத்தை பார்க்கவே சங்கடமாக இருந்தது பரத்துக்கு.

"இலக்கியாவுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். ரொம்ப சாரி அண்ணி...." பரத் சொல்ல, "பரவால்லை பரத். அவ மேல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இலக்கியாவுடைய கோபம் அவளுடைய வேதனையின் வெளிப்பாடு... தப்பு என் மேல அப்படிங்கும்போது இதெல்லாம் எனக்கு கிடைக்க வேண்டிய தண்டனையின் ஒரு பகுதி தான...அவ என்னை கொன்னுருந்தாலும் நான் சந்தோசப்பற்றுப்பேன்" தமிழ்செல்வி சொல்லவும் "ஐயோ அண்ணி அப்படி எல்லாம் சொல்லாதீங்க. நாங்க லவ் பண்ணும்போதே இலக்கியா உங்களை பத்தி சொல்லிருக்கா. உங்க மேல எந்த தவறும் இல்லைனு எனக்கு தெரியும். ஆனாலும் உங்களை பத்தி பேசுனா அவளுக்கு பிடிக்காது அதனால உங்களுக்கு ஆதரவா எதுவும் அவகிட்ட நான் பேசுனது இல்லை. ஆனா உங்க மேல எந்த தவறும் இல்லைனு எனக்கு தெரியும். செய்யாத தப்புக்காக நீ எவ்ளோ பண்ணிருக்கீங்க அப்படினும் எனக்கு தெரியும். கவலைப்படாதீங்க அண்ணி. ஒருநாள் நிச்சயம் இலக்கியா உங்களை புரிஞ்சுக்குவா" என்றவன் அவளுக்கு தனிமை கொடுத்து அங்கிருந்து விலகினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.