(Reading time: 28 - 56 minutes)
Priyamaanavale
Priyamaanavale

கம்ப்யூட்டர்ரில் அன்றைய மீட்டிங்கில் பேசப்பட்ட குறிப்புகளை எல்லாம் படித்து கொண்டிருந்த தமிழ்செல்விக்கு தலையை சுற்றுவதை போல இருந்தது. கண்களை கசக்கியவள் நேராக நிமிர்ந்து உட்கார்ந்தாள். தலைபாரமாக இருப்பதை போல இருந்தது. கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள். இரவெல்லாம் உறங்காமல் அழுது கொண்டிருந்தது, சாப்பிடாமல் இருந்தது, ஈர தலையுடன் அதிகாலை குளிரில் நடந்தது எல்லாம் சேர்ந்து கொண்டிருந்தது.

தொலைபேசி அழைக்க, கண்களை மெல்ல திறந்தவள் அதை எடுத்து காதில் வைத்தாள்.

"தமிழ், கம் டு மை ரூம்" ராமின் குரல் கேட்கவும், தொலைபேசியை அணைத்துவிட்டு எழுந்தவளுக்கு கால்கள் தள்ளாடுவதை போல இருந்தது. மெல்ல எழுந்த அங்கிருந்த வாஷ்பேஸினில் முகத்தை கழுகியவள் ராமின் அறையை நோக்கி சென்றாள்.

"ராம், இந்த டிசைனை பாருங்க. நான் ஒரு சின்ன சேஞ்ஜ் பண்ணிருக்கேன். இது ஓகேனா ஸ்கேன் பண்ணி பென் டிரைவ்ல ஆட் பண்ணிடலாம்" தன்னுடைய கையில் இருந்த அந்த பேப்பரை ராமிடம் நீட்டினாள் நித்யா.

அதை சில நொடிகள் பார்த்தவன் அதில் சில மாற்றங்களை சொல்லவும் அவள் ராமின் அருகே இருக்கையை இழுத்து போட்டு அமர்ந்து அதை செய்யவும், ராம் தமிழ்செல்வியை அழைத்தான்.

தமிழ்செல்வி வருவதை உணர்ந்தவள் வேண்டும் என்றே ராமிடம் ஏதோ கேப்பது போல நெருங்கி அமர, தமிழ்செல்வி உள்ளே நுழைந்தாள்.

இருவரும் அருகருகே அமர்ந்திருப்பதை கண்டவள் மனம் இன்னும் சுணங்கி போனது.

"வர சொன்னிங்களே...." தமிழ்செல்விக்கு ராமை நிமிர்ந்து பார்த்து பேசுவதற்க்கு கஷ்டமாக இருந்தது. அப்படி அருகருகே அவர்களை பார்க்க அவளால் முடியவில்லை.

"ஹான், இன்னைக்கு மீட்டிங்கில் டிஸ்கஸ் பண்ணுன மாதிரி நான் இந்த டாக்குமெண்ட்ஸ்ல சில மாற்றங்கள் செஞ்சுருக்கேன். இதை அப்டேட் பண்ணி அட்மினிஸ்ட்ரேடிவ் டிபார்ட்மென்ட்க்கு அனுப்பிடு" என்று அவன் ஒரு பைலை நீட்ட, அதை வாங்கி கொண்டவள் அதை ஒரு முறை சரிபார்க்க, அதில் இருந்த எழுத்துக்கள் எல்லாம் அவளுக்கு மங்கலாக தெரிந்தது. மீண்டும் தலையை சுற்றுவதை போல இருந்தது. கண்களை மூடி திறந்தவள், "சரி நான் ஒருமுறை சரிபார்த்துட்டு அனுப்பிடறேன்" என்றவள் அங்கிருந்து நகர முனைய, "தமிழ், இதோ என்னுடைய முதல் டிசைன். இதை இன்னைக்கு கிளையண்ட்க்கு அனுப்ப போறோம். எப்படி இருக்குனு பார்த்து சொல்லுங்க" என நித்யா அழைக்க, அனிருந்து வெளியே சென்றால் போதும் என இருந்தது தமிழுக்கு.

ஆனாலும் அதை மறுக்கமுடியாமல் அவளின் அருகே சென்றவள் அந்த பேப்பரை வாங்க முயல, அவளுக்கு மீண்டும் தலை கிறுகிறுக்க அவள் பற்றுதலாக அங்கிருந்த மேஜையை பிடிக்க முயன்று அது தவறி அவளின் கை அங்கிருந்த காபி கோப்பையில் பட அது அப்படியே அந்த பேப்பரில் சரிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.